பெரிய சர்ச்சைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சோனியா அகர்வாலின்'
ஒரு நடிகையின் வாக்குமூலம்' ரிலீஸானதை ஒட்டி பத்திரிகையாளர்களை சந்தித்தார். படத்தின் கதைப்படி டைரக்டருடன் இணக்கமாக இருந்தால் நடிகையாக முடியும் என்பது எல்லாருக்கும் பொருந்தாது. கிராமப் பகுதிகளில் இருந்து நடிக்க வரும் விபரம் தெரியாத இளம் பெண்களை சில டைரக்டர்கள் சூறையாடி விடுகிறார்கள் என்பது போலத்தான் கதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை நான் சென்னையில் உள்ள ஒரு தியேட்டருக்கு என் அம்மாவையும் அழைத்துக் கொண்டு போய் பார்த்தேன். நான் எதிர்பார்த்த சில காட்சிகளில் என் அம்மா குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார். நான் அவரை அம்மா இது சினிமாதானே என்று சொல்லி சமாதானப் படுத்துவதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது' என்கிற சோனியாவுக்கு இப்போதைக்கு இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் யோசனையே இல்லையாம். இன்னும் ஒரு ஐந்து வருடங்களுக்காவது முழுமூச்சாக நடித்து விட்டு அப்புறம் தான் திருமணத்தைப் பற்றியே யோசிக்கப் போகிறாராம்.