என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தனது '3' பட படை பரிவாரங்களோடு திடீரென்று
திருப்பதி புறப்பட்ட தனுஷ் தேவஸ்தானத்தில் தனது முடியை காணிக்கை செலுத்தினார். 'கொஞ்சம் முன்பே செய்திருக்க வேண்டியது. சரி இனியும் தள்ளிப்போட வேண்டாமே என்று தான் என் மனைவி ஐஸ்வர்யா, கொலவெறி அனிருத் உட்பட அனைவருமே திருப்பதி புறப்பட்டு வந்தோம். திரைப்பட தொழிலாளர் ஸ்ட்ரைக், '3' பட ரிலீஸ் இருப்பதால் மொட்டை அடிக்க எந்த டென்சனும் இல்லை. எப்படியும் இன்னும் ஒரு மாதத்துக்கு ஷூட்டிங் இருக்காது என்பது தெரிந்தே மொட்டை போட்டுக்கொண்டேன்' எனும் தனுஷ் சச்சினுக்காக போட்ட 'கொலவெறி ஆலபமும் யூடிபில் செம ஹிட்டுகளை அள்ளுவதால் ஏகப்பட்ட உற்சாகத்தில் இருக்கிறாரம்.
'3' ரிலீஸானதும் முதலில் முடிக்கப்போவது ஒப்புக்கொண்ட இந்திப்படத்தைத்தானாம். அடுத்து தமிழ்ப்படத்துக்கு எட்டிப்பார்க்க எப்படியும் ஆறு மாதமாவது ஆகும். அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது கொலவெறி கொண்ட தனுஷ்.