கொலவெறி பாடல் தனுஷை டெல்லிக்கு அனுப்பி வைத்தது. பிரதமர் மன்மோகன்
சிங்கின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அவர் அளித்த விருந்தில் பங்கேற்றார் தனுஷ். இப்போது அதே வாய்ப்பு ஸ்ருதிக்கும் கிடைத்துள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நம் பிரதமரின் சிறப்பு அழைப்பின் பேரில் டெல்லிக்குச் சென்றார் ஸ்ருதி. அங்கு மொரீஷியஸ் நாட்டின் பிரதமரும், அவருடன் வந்த குழுவினருக்கும் விருந்து அளித்தார் மன்மோகன் சிங். இதில் ஸ்ருதியும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராகப் பங்கேற்றார்.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ள ஸ்ருதி, "டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்த விருந்து நிகழ்வு நடைபெற்றது. இரு நாடுகளின் பிரதமர்களுடன் விருந்தில் பங்கேற்றதை மிகப்பெரிய கௌரவமாக கருதுகிறேன். இது என் வாழ்வின் முக்கியமான, மறக்க முடியாத தருணங்களில் ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார்.