Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் - ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா அஞ்சலி - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்

மீண்டும் கன்பார்ஃம் ஆனார்
கோச்சடையானில் தீபிகா படுகோன்


சொன்ன தேதிகளில் படப்பிடிப்பை நடத்த முடியாமல் போனதற்கு ரஜினியின் Deepika Padukoneஉடல்நிலைதான் காரணம் என்பதை நன்கு உணர்ந்திருந்த தீபிகா படுகோனே, தன் கால்ஷீட்டை இப்படி படுவீனே என்றாக்கிவிட்டார்களே என்று புலம்பாத குறை. மீண்டும் எப்போது ராணா படப்பிடிப்பு துவங்கும் என்று கேள்வி கேட்ட மீடியாவை, ஒரு பிளேடு பார்வை பார்த்து அவர் பிராண்டி தள்ளியதையெல்லாம் நாடு நன்கறியும். எனக்கு எதுவும் தெரியாது, அவங்களைதான் கேட்கணும் என்று கூறியவர், இப்படத்திற்காக கொடுத்த தேதிகளை வேறு படத்திற்கு மாற்றிக் கொடுக்கவும் செய்தார்.

எல்லா கோபத்தையும் ஒரே வினாடியில் மொக்கையாக்கக் கூடிய சக்தி ஒரு புன்னகைக்கு உண்டு. அப்படிதான் தனது அஹ்ஹ்ஹா சிரிப்பால் தீபிகாவை அழகாக கவிழ்த்துவிட்டார் ரஜினி. கோச்சடையான் படத்தில் அதே தீபிகா படுகோனேவே நடிக்கட்டும் என்றாராம் கே.எஸ்.ரவிகுமாரிடம். ரஜினியே சொல்லியாச்சு. அப்புறம் என்ன?

மும்பைக்கு போன் போட்டு முந்தைய கணக்கு வழக்குகளை நேராக்கி தீபிகாவை கோச்சடையான் படத்தில் புக் பண்ணிவிட்டார்கள்.

வானுக்கும் பூமிக்குமாக சிவ தாண்டவ கோலத்தில் நிற்கும் ரஜினியின் அந்த ஸ்டைலான கோச்சடையான் ஸ்டில்லுக்கு முன்னே, தீபிகாவின் அலட்டல்கள் எதுவும் எடுபடப்போவதில்லை என்பது மட்டும் இப்போதே பளிச்.

Kochadaiyan Stills

Share This News


Related Posts Plugin for WordPress, Blogger...
Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter