தன்னையும் நடிகை நயன் தாராவைப் பற்றியும் நாள்தோறும் நடனமாடி வரும் வதந்திகள் பிரபுதேவா மாஸ்டரை எந்த வகையிலும் பாதித்ததாகத் தெரியவில்லை.
'ரவுடி ரத்தோர்' இந்திப்படம் தொடர்பான வேலைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு வரும் அவர், இடையில்
சைலண்டாக தனக்கு சம்பந்தமில்லாத ஒரு துறையிலும் சாதனை படைக்க முயன்று வருகிறார்.அது மாஸ்டரின் இசை ஆல்பம்.
தனது இசை அமைப்பில் ஒரு ஆல்பம் வெளியிட வேண்டுமென்பது பிரபுதேவாவின் நீண்டநாள் கனவு. சமீபகாலங்களில் தனக்குக் கிடைத்த ஓய்வுகளை இதற்குப் பயன்படுத்திக் கொண்ட மாஸ்டர் மிக வித்தியாசமான ஐந்து பாடல்களுடன் கூடிய ஒரு ஆல்பத்தை ஏறத்தாழ முடிக்கும் நிலைக்கு வந்துவிட்டார்.
இந்த ஐந்து பாடல்களையுமே வீடியோவாக படம்பிடிக்க முடிவு செய்திருக்கும் பிரபுதேவா, முதலில் வெறுமனே ஆடியோவை மட்டும் காதலர் தினத்தன்று ரிலீஸ் செய்துவிட்டு, விஷுவல்களை மார்ச்சில் வெளியிட முடிவு செய்திருக்கிறாராம்.