ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் தாறுமாறான ஹிட், ஆட்சி எதுவாக இருந்தால் என்ன? படம் நல்லாயிருந்தா ஓடும் என்கிற தத்துவத்தை உணர்த்தி யிருந்தது அப்படம். இந்த நேரத்தில் இன்னொரு தத்துவத்தையும் உணர்ந்தாராம் உதயநிதி ஸ்டாலின்.
இவ்வளவு லாபம் வந்துருக்கே, நம்ம டைரக்டர் ஒரு கார் வாங்கிக்கட்டும் என்ற ஆசையில் சில லட்சங்களை அப்படத்தின் டைரக்டர் ராஜேஷுக்கு வழங்கினாராம்.
பணத்தை வாங்கிக் கொண்ட ராஜேஷ், 'கோடி கோடியா சம்பாதிச்சாங்க. கொஞ்சம்தான் கொடுத்திருக்காங்க' என்று கமெண்ட் அடித்தாராம் வேறு ஒருவரிடம். தகவல் உதயநிதி காதுக்கு போக, சின்னத்தளபதி அப்செட்!
எந்த கலர் பசுவா இருந்தா என்ன, மடி வெயிட்டா இருக்கான்னு பார்க்கறதுதானே மனுஷனோட இயல்பு?
|