புலியை வேட்டையாடிவிட்டு சிங்கத்திற்கு குறி வைத்திருக்கிறார் சக்ரி டோலட்டி. பில்லா-2 படத்தின் மூலம் அஜீத்தின் ஹிட் ஹீரோ இமேஜை முடிந்தவரை ரவுண்டு கட்டி தாக்கினார் அப்படத்தின் இயக்குனர் சக்ரி டோலட்டி. அடுத்ததாக இவர் மையம் கொண்டிருப்பது ஆழ்வார்ப்பேட்டை ஏரியாவில் என்கிற திகிலூட்டும் செய்தி கமல் ரசிகர்களை அதிர வைத்திருக்கிறது.
கமலை பொருத்தவரை பிளாக் போர்டும் அவரே. சாக்பீசும் அவரே. இதில் வாத்தியார் என்பவர் யாராக இருந்தால் என்ன? சக்ரி வந்தாலும் 'ஷாட் கட்'டோடு நின்று விடும் அவரது பணி. இருந்தாலும் ரிஸ்க் எதுக்கு என அஞ்சும் கமல் ரசிகர்களுக்கு என்ன பதில் கிடைக்கப் போகிறதோ, போகட்டும்... நாம் சொல்ல வருவது அதைவிட முக்கியமான அக்கப்போர்.
கொஞ்ச நாட்களாக சக்ரி என்ற பேரை கேட்டாலே ஆங்கிரியாகி அலறிக் கொண்டிருக்கிறார் பில்லா 2 படத்தின் ஹீரோயின் பார்வதி ஓமணக்குட்டி. படத்தில் ஏகப்பட்ட காட்சிகளில் நடிச்சிருந்தேன். ஆனால் படத்தை தியேட்டர்ல பார்க்கும்போது நெஞ்சுவலியே வந்துருச்சு. பல காட்சிகளை வெட்டியெறிஞ்சுட்டாரு சக்ரி. அடுத்த படத்துலேயாவது இப்படியெல்லாம் மாட்டிக்கக் கூடாது. கவனமா கதை கேட்டுதான் கால்ஷீட் கொடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.
பேயடிச்ச பிறகும் பொழச்சிப்பேன்னு நம்புறாரு பாருங்க... அங்க நிக்கிறாரு ஓமணக்குட்டி!
|