கங்காருவின் சுகமான லக்கேஜ் போலதான் வெற்றியும். முதல் பட வெற்றியை அடுத்தடுத்த படங்களிலும் தக்க வைப்பதற்காக நம்ம ஹீரோக்கள் நடத்தும் போராட்டம் இருக்கிறதே, அது எம்.ஆர்.ராதாவின் ரத்த கண்ணீரை விட கொடுமையானது. அப்படி ஒரு போராட்டத்தில் சிக்கிக் கொண்ட உதயநிதி தனக்கு பொருத்தமான டைரக்டரையும் கதையையும் தேடி ஓடிக் கொண்டேயிருக்கிறார். அவரைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல் ஒன்று, 'அடிச்சாருப்பா லக்கி பிரைஸ்' என்பது போல இருக்கிறது.
அது?
முழி பாண்டியராஜன் அழகி சீதாவை வைத்து இயக்கிய 'ஆண்பாவம்' படத்தின் ரீமேக் உரிமை இப்போது உதயநிதி கைக்கு வந்துவிட்டதுதான். தமிழ்சினிமாவில் ஒருகாலத்தில் ஹிட்டடித்த படங்களை வரிசையாக பார்த்து வந்த உதயநிதி ஆண்பாவம் படத்தில் மயங்கினாராம்.
இதில் பாண்டியராஜன் கேரக்டரில் தானும், பாண்டியன் கேரக்டரில் சந்தானமும் நடித்தால் எப்படியிருக்கும் என்று அவர் மனக்கணக்கு போட, விடை கோடிக்கணக்கில் வந்திருக்கும் போல.... சட்டென அதன் உரிமையை வாங்கிவிட்டாராம். இனிமேல்தான் இதை இயக்கப் போகும் டைரக்டரை தேட வேண்டும்.
பிரியாணி கிண்டிய கைக்கு அதை சுட சுட பரிமாற நல்ல கரண்டி கிடைக்காமலா போய்விடும்? |