அண்ணி கொழுந்தனுக்கு 'கொக்கி' போடுறது, மாமனார் மருமகளுக்கு 'நூல்' விடுறது... இப்படி உறவுகளை விறகுகளாக எரிய விட்டு அதில் குளிர்காய்கிற டைரக்டர் ஒருவருக்கு வாலின்ட்டரி ரிட்டையர்மென்ட் கொடுத்துவிட்டார்கள் ரசிகர்கள்.
அவர் கசக்கிக் போட்ட கார்பன் பேப்பரை களவாண்டாரோ என்னவோ? மறுபடியும் அதே போன்ற கதை ஒன்றுடன் வந்திருக்கிறார் அரிவாள் இயக்குனர் சஞ்சய்ராம். இவர் இயக்கிக் கொண்டிருக்கிற 'குற்றாலம்' திரைப்படத்தின் கதையை கேட்டால் தீயணைப்பு வண்டிதான் தேவைப்படும் எரிச்சலை அடக்க.
முதலிரவுக்கு முன்பே கணவரை பறிகொடுக்கிறாள் ஒரு பெண். அவளுக்கு ஒரு தங்கை. அந்த தங்கையின் காதலுக்கு திடீரென்று ரெட் சிக்னல் காட்டுகிறாள் இந்த அக்கா. ஏன்? அங்குதான் அனகோண்டா நாக்கால் நம் மனசை சொறிகிறார் சஞ்சய்ராம். 'உன் காதலனை ஒருநாள் என்னோடு புருஷனா இருக்க வை. அப்புறம் நானே அவனை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்கிறாளாம் அக்கா.
இப்படிப்பட்ட கதையையெல்லாம் எங்கதான் புடிக்கிறாங்களோ, அந்த ட்ரிப்பிள் எக்ஸ் வெப்சைட்டுகளுக்கே வெளிச்சம்!
|