Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் - ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா அஞ்சலி - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்
பையன் நல்ல ஃபார்ம்ல இருக்கான்...
- சூர்யா பற்றி கமல்

ஊசி முனையில் தேனைத் தடவி அதை நறுக்கென்று செலுத்துவதில் வல்லவர் பத்திரிகையாளர் பிஸ்மி. நேற்று நடந்த நடிகர் சூர்யாவின் பிரஸ்மீட்டில் அவரது கேள்வியும், சூர்யாவின் பதிலும் அட்ட'ஹாஸ்யம்....'

சூர்யா, நீங்க கதை கேட்டு முடித்ததும் அதை விஜய்யுடன் ஷேர் பண்ணிப்பீங்களா? முதலில் இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத சூர்யாவும், 'அதுக்கு அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன்' என்று கூறிவிட்டு Suryaபிஸ்மியின் முகத்தையே பார்க்க, 'இல்ல... எதுக்கு கேட்கிறேன்னா நீங்க சைனா தீவிரவாதியோட மோதுறீங்க. அவரு பாகிஸ்தான் தீவிரவாதியோட மோதுறாரு. உங்க ரெண்டு பேராலயும் அண்டை நாடுகளில் பெரிய பிரச்சனையா இருக்கு' என்றாரே பார்க்கலாம். விழுந்து விழுந்து சிரித்தார் சூர்யா.

பொதுவாகவே பெரிய நடிகர்களின் பிரஸ்மீட்டில் அவசியமில்லாத கேள்விகளும் விழும். அதிகப்படியான எரிச்சலும் எழும். ஆனால் நேற்று நடந்த அந்த பிரஸ்மீட், இன்னொரு சூர்யா படம் பார்த்தது போல அத்தனை கச்சிதம்.

'மகேசன் தீர்ப்பையும் மதிக்கிறேன். மக்களின் தீர்ப்பையும் மதிக்கிறேன்' என்று சூர்யா பேசியதெல்லாம் தேர்ந்த அரசியல்வாதியின் ஸ்டைல். (அப்படியும் ஒரு ஐடியா இருக்கோ, என்னவோ?) ஏராளமான விஜய் கேள்விகளும் இடையிடையே செருகப்பட, அத்தனைக்கும் ஆனந்தப்பட்டார் சூர்யா.

7 ஆம் அறிவு படத்தை விஜய் பார்த்தாரா? இந்த கேள்விக்கு, 'இன்னும் இல்ல. ஆனா அவங்க மனைவி பார்த்தாங்க. நிறைய பாராட்டுனாங்க' என்றார் சூர்யா. நீங்க வேலாயுதம் பார்த்தீங்களா என்ற இன்னொரு கேள்விக்கு, 'இன்னும் 7 ஆம் அறிவு படத்தையே பார்த்து முடிக்கல நான். இனிமேல்தான் வேலாயுதம் பார்க்கணும். ஆனால் இரண்டு படங்களுமே நல்லா ஓடிட்டு இருக்கு. அப்படிதான் இருக்கணும். ஒரு படம் கமர்ஷியலா வந்தால், இன்னொரு படம் வேறொரு டைப்பில் வரணும்' என்று சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளை அவிழ்த்துவிட்டார்.

லெஜண்ட் ஒருவர் படம் பார்த்தார். அவருடைய பையன்தான் அவரை அழைச்சுட்டு போனாராம். தியேட்டரிலிருந்து வெளியே வந்தவர், என்னை உடனே தொடர்பு கொண்டார். ஏன் இந்த படத்தை பற்றி இப்படி சொன்னாங்க. ஆரம்பத்தில் மற்றவங்க சொன்னதை கேட்டு என்னவோன்னு நினைச்சுதான் வந்தேன். நானும் பதினேழு படம் பண்ணியிருக்கேன். பட்... இந்த படம் பிரமாதம்னு பாராட்டினார் என்று சூர்யா சொன்னது யாரை? பிற்பாடு கேட்க வேண்டும் என்று நினைத்து மறந்து போனார்கள் அத்தனை பத்திரிகையாளர்களும்.

சூர்யா பேசியதிலேயே ரொம்ப அட்ராக்டிவ் ஏரியா இதுதான். 'ரஜினி சார் படத்தை பார்த்துட்டு என்னை கட்டிப்பிடிச்சு பாராட்டினார். கமல் சார் படம் பார்க்க வரும்போது நான் இல்லை. 'பையன் நல்ல ஃபார்ம்ல இருக்கான்'னு சொன்னாராம். கேட்கவே சந்தோஷமா இருக்கு' என்றார்.

Share This News


Related Posts Plugin for WordPress, Blogger...
Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter