|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்

மேல விழுந்த அனகா
மாமனார் கஜினியின் வலி!

Gajini

யோகம்யா அவருக்கு... என்று பலரும் காதுபட பேசினாலும், நான் பட்ட கஷ்டம் எனக்குல்ல தெரியும் என்கிறார் கஜினி. கொஞ்சம் விவகாரமான ஆள்தான் இந்த கஜினி. சமீபத்தில் வெளிவந்த சிந்து சமவெளி படத்தில் மருமகள் அனகாவை லு£ட் விடுகிற அந்த கொடூர மாமனார் இவரேதான்.

தியேட்டர் பக்கம் போனா திடுக் திடுக்குன்னு இருக்கு. எப்ப என்ன ரீயாக்ஷன் வருமோன்னுதான். ஆனால் என்னோட கேரக்டர் பற்றி ஏகப்பட்ட அபிப்ராய பேதங்கள் இருந்தாலும், நல்லா நடிச்சிருக்கப்பா என்று ரசிகர்கள் கைகுலுக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்காக நான் பட்ட கஷ்டம் கொஞ்சமில்லங்க என்று பிளாஷ்பேக்கை உப்பு கரிக்க ஓப்பன் பண்ணுகிறார் கஜினி. (வேறொன்றுமில்ல. கண்ணீரோடுன்னு சொல்ல வந்தோம்)

அப்பா மளிகை கடை வச்சுதான் எங்களையெல்லாம் உருவாக்கினார். சைக்கிளில் வச்சு என்னை அழைச்சுட்டு போய் சினிமா காட்டுவார். அவரு கொடுத்த ஊக்கம்தான் சினிமா மேல எனக்கொரு வெறியை உண்டாக்குச்சு. பிலிம் இன்ஸ்ட்யூட்ல படிக்கணும்னு நினைச்சப்போ நிறைய செலவாகும். வேணாம்னு தடுத்தாங்க சொந்தக்காரங்க. நான் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க. அதே மாதிரி எனக்கும் செய்வீங்க இல்லையா? அந்த கல்யாண செலவுக்கு வச்சுருக்கிற பணத்தை கொடுங்க. நான் படிச்சுக்கிறேன் என்றேன். அப்புறம்தான் சென்னை வந்து இன்ஸ்டிடியூட்ல படிச்சேன்.

சாமி சார் உடம் சரியில்லைன்னா கூட பாவம் பார்க்க மாட்டார். நான் ஜூரத்தோட மழையில நனைஞ்சு நடிச்சு கொடுத்திருக்கேன். குழி வெட்டிக் கொண்டிருக்கும் போது என் மேல அனகா விழுற காட்சியில் முதுகுல பேட் கூட கட்டல. ஏன்னா மேல் சட்டை போடாம நிக்கிற மாதிரி காட்சி. அப்படியே அவங்க என் மேல விழுவாங்க. அவங்க கையில் இருக்கிற சொம்பு என் முதுகுக்கு பின்னாடி விழும். அது மேல நான் விழுவேன். என் மேல அனகா. மற்றவங்களுக்கு வேணா இது கிளுகிளுன்னு இருந்திருக்கும். எனக்கு எலும்புல வலி. உயிரே போயிடுச்சு. இருந்தாலும் அது மாதிரி ரெண்டு மூணு முறை விழ வேண்டியதாப் போச்சு.

கையில தீப்பந்தத்தை வச்சுகிட்டு யானையை விரட்டுற சீன் ரொம்ப திரில்லிங். ஏன்னா பழகுன யானையா இருந்தாலும் இந்த மாதிரி தீப்பந்தத்தோட கிட்ட போனா என்ன செய்யும்னு தெரியும். பயந்து பயந்துதான் அந்த சீன்ல நடிச்சேன். இப்படி சொல்லிகிட்டே போகலாம்.

இந்த படத்தின் கான்சப்ட் தப்புன்னு சொல்றாங்க. நான் அப்படி சொல்ல மாட்டேன். நல்லா படிச்ச துணை வேந்தர் ஒருத்தரே தன் மருமகளிடம் தப்பா நடந்துகிட்டதா பேப்பர்ல படிச்சேன். பல இடங்களில் இப்படி நடக்கற¬தான் எங்க டைரக்டர் காட்டியிருக்காரு.

மூச்சு விடாமல் பேசுகிற கஜினி சரித்திரம் படத்திலும் அரவான் படத்திலும் முக்கிய ரோலில் நடிக்கிறாராம். அது போகட்டும். இப்பவும் அனகாவோட டச் இருக்கா என்றால், தினமும் போன்ல பேசுவாங்க என்றார் அப்பாவியாக. மாமோய்... அனகாவ விட்ருங்க!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter