|
கல்யாண வீட்ல எல்லாரையும் திருப்தி படுத்த முடியாதுன்னு சொல்லிட்டார் சூப்பர் ஸ்டார். மற்றவங்களுக்கு அது பொருந்தும். ஆனால் எங்களுக்குமா என்கிறார்களாம் ஆக்கர் ஸ்டுடியோவின் முன்னாள் ஊழியர்கள். கடந்த பல வருடங்களாக அன்போடு பழகிய முதலாளியம்மாவுக்கு கல்யாணம். கட்டாயம் நமக்கும் ஒரு பத்திரிகை வரும்னு காத்திருந்த அவர்களுக்கு ஒரு பிட் நோட்டீஸ் கூட வரவில்லை அங்கிருந்து.
ஆறு மாதங்களுக்கு முன்பே இவர்கள் எல்லாம் கம்பெனியில் இருந்து நீக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் ஆக்கரிலிருந்து மிக முக்கியமான நபர் ஒருவரும் நீக்கப்பட்டிருக்கிறார். அதுவும் சில வாரங்களுக்கு முன்புதான்.
சவுந்தர்யா ரஜினி மீது ஏராளமான கடன் புகார்கள் வந்தபோதெல்லாம் அவர் தரப்பில் மீடியாக்களிடம் பேசி வந்தவர் கார்த்தி. இவர் ஆக்கர் ஸ்டுடியோவின் சிஇஓ வாகவும் இருந்தார். இந்த படம் தொடர்பான கேள்விகளுக்கு கூட சவுந்தர்யா சார்பில் பதிலளித்து வந்தவர் இவர்தான். இப்போது இவரை அதிரடியாக நீக்கிவிட்டார் சவுந்தர்யா. ஏராளமாக சுருட்டி விட்டார் என்று இவர் மீது சவுந்தர்யாவும், எனக்குதான் அவரு பணம் கொடுக்கணும் என்று இவரும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்.
ஆச்சர்யம் என்னவென்றால் கல்யாண பத்திரிகை இந்த கார்த்திக்குக்கும் இல்லாமல் போனதுதான். இப்போது ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அஜய் தேவ்கான் நடிக்கும் இந்தி படம் ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறாராம் கார்த்திக். சவுந்தர்யாவின் டவுட் நியாயமானதுதானோ?
|