|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்

மிரட்டுவது சரியல்ல....
சாமி சப்போர்ட் பத்மப்ரியா

Padmapriya

கன்னத்தில் அறைந்தவர் வீட்டில் கல் விழுந்தால் சந்தோஷம்தானே வரும்? ஆனால் பத்மப்ரியா அப்படியல்ல. டைரக்டர் சாமி வீட்டில் கல்வீச்சு சம்பவம் நடந்ததை அறிந்து அச்சச்சோ என்கிறார்.

சிந்து சமவெளி படத்தில் மாமனார்-மருமகளுக்கு இடையே தொடரும் கள்ள உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தரப்பிலிருந்தும் கண்டனங்களும் கடுமையான வார்த்தைகளும் வந்து விழுகின்றன. இந்த படத்தின் டைரக்டர் சாமியை தாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர் வீட்டில் கல்லெறிந்து காரையும் அடித்து நொறுக்கிவிட்டார்கள் சிலர். இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இப்படத்தின் நாயகியான அனகாவையும் விட்டேனா பார் என்று மிரட்டுகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இனிமே கால் வைச்சா நடக்கறதே வேற என்கிறார்களாம் அவர்கள். (எப்புடிதான் நம்பரை புடிக்கிறாய்ங்களோ?)

இந்த சம்பவம் கேரளாவில் இருக்கிற பத்மப்ரியாவுக்கு தெரியுமா? இது பற்றி என்ன நினைக்கிறார் என்பதை அறிய அவரை தொடர்பு கொண்டோம். நீங்க சொல்லிதான் எனக்கு இந்த விஷயம் தெரியும். என்னதான் இருந்தாலும் இந்த விஷயத்தை கருத்து ரீதியாகதான் எதிர்கொள்ளணுமே தவிர, இப்படி கல் வீசுவதும் மிரட்டுவதும் சரியல்ல என்றார்.

அருவா கூரா இருந்தாலும் இது கைப்பிடியை ரசிக்கிற பொண்ணுடோய்....

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter