|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்

ஃபிகரை கரெக்ட் பண்றது?
நடிகர் கார்த்தி நம்பிக்கை!

Actor Karthi

வழக்கமாக பாடல் வெளியீட்டு விழா நடக்கும். வாழ்த்தி பேசுகிற விவிஐபிகள் வந்துட்டோமே என்பதற்காக சில வார்த்தைகள் பாராட்டிவிட்டு கிளம்புவார்கள். ஆனால் தா படத்தின் பாடல்களை குறித்து விவிஐபிகள் பேசிய வார்த்தைகளில் நனைய நனைய நிஜம் இருந்தது. பாடல்களும் அப்படி ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது பார்வையாளர்களை.

ஸ்ரீ விஜெய் என்ற இந்த இசையமைப்பாளர் பிறந்த மண் ஈழ மண்! விழாவில் பேசிய ஆர்.கே.செல்வமணி ஒரு குரல் வஞ்சகர்களாலும் துரோகிகளாலும் நசுக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஸ்ரீ லங்காவிலிருந்து இங்கு வந்திருக்கும் ஸ்ரீவிஜெய்யின் குரல் உலகமெங்கும் உள்ளவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு குரலாக இருக்கும் என்பது மட்டும் சத்தியம். பாடல்கள் அந்தளவுக்கு நன்றாக இருக்கிறது. மிகப்பெரிய பேர் கிடைக்கும் அவருக்கு என்றார்.

பின்னாலேயே பேச வந்த பெப்சி தலைவர் வி.சி.குகநாதன், ஆர்.கே.செல்வமணி சொன்னதில் ஒரு சின்ன பிழை. அவர் ஸ்ரீ லங்காவிலிருந்து வந்தவரல்ல. ஈழத்திலிருந்து வந்தவர். ஒரு குரல் நசுக்கப்பட்டது என்று சொன்னார் செல்வமணி. போராட்டத்தின் அந்த குரலை யாராலும் நசுக்க முடியாது. அது மீண்டும் மீண்டும் கர்ஜித்துக் கொண்டேயிருக்கும். இந்த படத்தின் டைரக்டரின் பெயர் சூர்ய பிரபாகர். இப்போது புரிகிறதா ஏன் இந்த படத்திற்கு ஈழத்திலிருந்து இசையமைப்பாளர் வந்தார் என்று. பிரபாகர் என்ற அந்த பெயர்தான் தானாக அழைத்து வந்திருக்கிறது என்றார் ஆக்ரோஷத்தோடு.

பாடல்களை வெளியிட வந்திருந்தார் நடிகர் கார்த்தி. எல்லா இளைஞர்களுக்கும் ஒரு குழப்பம். பிடிச்ச பிகருக்கு எப்படி ரூட் போடுறதுன்னு. அந்த குழப்பத்தை நான் தீர்த்து வைக்கிறேன் என்ற இந்த படத்தின் ட்ரெய்லர்ல சொல்லியிருக்காங்க. நாட்ல ரொம்ப பேருக்கு அதுதான் பிரச்சனையா இருக்கு. அதை தெரிஞ்சுக்காவாவது இந்த படத்துக்கு திரளா வருவாங்க என்ற கார்த்தி, எனக்கும் இப்படி ஒரு குழப்பம் இருக்கு. நானும் தெரிஞ்சுக்க ரொம்ப ஆவலா இருக்கேன் என்று சொல்ல, கூடியிருந்த கூட்டம் தன்னையறியாமல் கைதட்டியது. தனது உரையில் தன்னை வருங்கால மக்கள் திலகம் என்று வர்ணித்த வி.சி.குகநாதனுக்கும் நன்றி சொன்னார் கார்த்தி.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter