|
ஒரு சாதாரண உதவி இயக்குனராக நுழைந்து வெற்றிப்பட இயக்குனராகி இன்று தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். வெட்டிப் போட்டாலும் விடைத்துக் கொண்டு திரியாத அவரது பண்புக்கும், எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் பழசை மறக்காத அவரது நட்புக்கும் கிடைத்த வெற்றி இது என்றே கொண்டாடுகிறது அவரது நட்பு வட்டம்.
தனக்கேயுரிய இன்னொசென்ட் சிரிப்புடன் பேச ஆரம்பித்தார் முருகதாஸ். 20 செஞ்சுரி ஃபாக்ஸ் தயாரிச்ச படங்களை பார்த்து பிரமிச்சு போனவன் நான். அவங்களோட சேர்ந்து படம் தயாரிக்கிற வாய்ப்பு கிடைச்சது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்தி கஜினி பார்த்துட்டு என்னை அழைத்து, சேர்ந்து படம் பண்ணலாம்னு சொன்னாங்க. நான் மீண்டும் தமிழ் படம் இயக்கணும்னு ஆசைப்பட்டேன். அதனால் இப்ப என்னால பாலிவுட்ல படம் பண்ண இயலாதுன்னு சொன்னேன். அப்படின்னா நாம சேர்ந்து படம் தயாரிக்கலாம்னு சொன்னாங்க. எவ்வளவோ டேலண்ட்டான இளைஞர்கள் வாய்ப்பு கிடைக்காம அலைஞ்சுட்டு இருக்காங்க. அவங்களுக்கும் இவங்களுக்கும் நடுவில நான் ஒரு பாலமா இருக்கேன் அவ்வளவுதான்.
பொதுவா இந்த மாதிரி வர்ற கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுது. அதுக்கு காரணம் எங்கிருந்தோ வந்திருக்காங்க. படம் எடுத்தா போதும்னு ஏதாவது ஒரு படத்தை எடுத்து கொடுத்து அத்துடன் அனுப்பி வச்சிடுறோம். அந்த மாதிரி இந்த வாய்ப்பு அமைஞ்சுரக் கூடாது. அவங்க தொடர்ந்து படம் எடுக்கணும். நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்கணும் என்ற நோக்கத்தில் அவசரப்படாம நிதானமா இந்த கதையை தேர்ந்தெடுத்தேன்.
முதல் படத்தில் விமல், ஜெய் இருவரும் ஹீரோவாக நடிக்கிறாங்க. என்னுடன் தினா படத்திலிருந்து அசிஸ்டென்ட் டைரக்டராக வேலை பார்த்த சரவணன் இயக்குகிறார். ஹீரோயின் தேர்வு நடந்துகிட்டு இருக்கு. பெரிய பெரிய ஹீரோக்களை மட்டுமே வச்சு படம் எடுத்த இந்த நிறுவனம், என்னோட சேர்ந்து கதையை மட்டுமே ஹீரோவாக நினைச்சு படம் எடுக்க வந்திருக்காங்க. அவங்களுக்கு வெற்றி நிச்சயம் என்றார் முருகதாஸ். |