|
கல்யாணம் முடிந்தது. ஹனிமூனும் முடிந்தது. தனது போர்ஷனை முடித்துக் கொடுக்க சென்னைக்கு வந்திருக்கிறார் மனிஷா கொய்ராலா. மாப்பிள்ளை படத்தில் தனுஷ§க்கு மாமியாராக நடிக்கும் மனிஷா, ஒரு முக்கியமான பாடல் காட்சியில் ஆடிவிட்டு போகதான் சென்னைக்கு வந்திருக்கிறார். ஆனால் வந்த இடத்தில் ஆட்டம் இல்லை. அழுகாச்சி மட்டும்தான்!
நு£ற்றுக்கும் மேற்பட்ட நடன பெண்கள் புடை சூழு மனிஷாவும், தனுஷ§ம் ஆடுகிற பாடல் காட்சியை நேற்று படம் பிடிக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட் ஒன்றும் போடப்பட்டுள்ளது. எல்லாம் தயார். எல்லாரும் தயார். ஆனால் வரவேண்டிய தனுஷ் திடீரென்று உடம்பு சரியில்லையென்று வீட்டுக்கு சென்றுவிட்டார்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. திரைப்பட தொழிலாளர்களுக்கு இரண்டு மடங்கு சம்பள பேட்டா தர வேண்டும். தனது மட்டம் போடும் தந்திரத்தை தனுஷ் முன்பே அறிவிக்காததால் தயாரிப்பாளருக்கு சம்பள நட்டம். அதுமட்டுமல்ல, மனிஷா கொய்ராலா பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருப்பதால் ஒவ்வொரு நாளும் எதிர்பாராத பில் சுமை. திங்கள் கிழமையான இன்றும் தனுஷ் வரவில்லையாம். எனவே தயாரிப்பாளருக்கு இன்றைய பஞ்சாங்க பலனும் ராவுகால காவுதான்!
எந்திரன் ஆடியோ ரிலீசுக்கு மலேசியா செல்ல விரும்பினார் தனுஷ். அதற்கு தயாரிப்பாளரான நேமிசந்த் ஜபக் ஒப்புக் கொள்ளவில்லை. இதை மனதில் வைத்துக் கொண்டுதான் இப்படி பழி வாங்குகிறாரோ என்று முணுமுணுக்கிறார்கள் தொழிலாளர்கள்.
|