|
பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் வீட்டு விசேஷத்திற்கு சமீபத்தில் நேரில் போய் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா. பொதுவாக யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தம்பதிகளை போயஸ் கார்டன் வீட்டுக்கு அழைத்து மரியாதை செய்து அனுப்புவது அவரது வழக்கம். மிகவும் முக்கியமானவர்களாக இருந்தால் மட்டுமே அவர்கள் இருக்கிற இடத்திற்கு செல்வார் ஜெ.
பாடகர் யேசுதாஸ் முன்னாள் முதல்வர் ஜெ.வின் குடும்ப நண்பர் வட்டத்தில் இருக்கிறார் என்பதை பறைசாற்றியது இந்த வருகை. இதை தொடர்ந்து ஒரு விஷயத்தை கசிய விடுகிறார்கள் அரசியல் வட்டாரத்தில். தினமும் போயஸ் கார்டனில் இருக்கிற ஜெயலலிதா வீட்டில் பக்தி பாடல்கள் யேசுதாஸ் குரலில்தான் ஆரம்பிக்குமாம். அதே மாதிரி இரவு நேரங்களில் பக்தி பாடல்களை கேட்டுவிட்டு து£ங்க செல்வதும் அவரது வழக்கமாம். அப்போதும் அவரது சாய்ஸ் கே.ஜே.யேசுதாசின் தெய்வீக குரல்தானாம்.
இப்போது சொல்லுங்கள், இந்த விசேஷத்துக்கு ஏன் வந்தார் ஜெ என்று? இது ஒருபுறம் இருக்க, சூப்பர் ஸ்டார் ரஜினி வீட்டு விசேஷத்திற்கு அவரே ஜெயலலிதாவுக்கு நேரில் சென்று அழைப்பு வைத்தும் ஏன் வரவில்லை என்றும் கவனித்து காரணத்தை அலசிக் கொண்டிருக்கிறது மீடியா. |