|
கேரளாவுக்கு போய்விட்டார் மீராநந்தன். இது கமர்ஷியல் பிரேக் இல்லை. கண்ணீர் பிரேக்! வால்மீகி, அய்யனார் போன்ற இரண்டு படங்களில் நடிக்கும்போது கூட இத்தனை பிரச்சனை இல்லை அவருக்கு. சூரியநகரம் படத்தில் நடிக்கும் போதுதான் இப்படி. அப்படத்தின் டைரக்டர் செல்லமுத்து என்ற வாலிபரின் காதல் புரப்போஸ்தான் மீரா நந்தனை கவலைக்குள்ளாக்கிவிட்டது.
இப்படத்திற்காக 25 நாட்கள் கால்ஷீட் போதும் என்றுதான் முதலில் கேட்டு வாங்கினாராம் செல்லமுத்து. பின்பு அவ்வளவு சீக்கிரம் பேக்கப் பண்ண மனசில்லையோ என்னவோ, மீரா நந்தனின் கால்ஷீட் தேதியை அறுபது நாட்களை வரை இழுத்திருக்கிறார். இடையில்தான் இந்த காதல் அம்பு! சட்டென்று இதற்கு மறுப்பு தெரிவித்த மீரா, தனது போர்ஷனை எப்படியோ முடித்துக் கொடுத்துவிட்டு கேரளா சென்றுவிட்டார். இந்த விஷயம் வெளியில் கசிந்து முன்னணி வார இதழில் பெரிய ஸ்டோரியாகிவிட்டது.
நான் சொல்லல என்று இரு தரப்புமே மோதிக் கொண்டாலும், மீராவின் மனசில் துளி கூட காதல் இல்லை என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது. ஒன் சைட் லவ் தண்ணியடிக்க வேண்டுமானால் உதவும். படத்தை ஹிட்டாக்க உதவுமோ? ஆனால் அப்படி நம்பிக் கொண்டிருக்கிற இயக்குனர் செல்லமுத்து இன்னும் இது பற்றி மீடியாக்களிடம் புலம்பிவருகிறாராம்.
மீராநந்தனை தொடர்பு கொண்டு கேட்டோம். சார். அந்த படத்தோட தயாரிப்பாளர் ரொம்ப நல்லவரு. நிறைய செலவு பண்ணி இந்த படத்தை எடுத்திருக்கார். நான் ஏதாவது சொல்லப் போய் அது தயாரிப்பாளருக்கு தொல்லையா அமைஞ்சிரக் கூடாது. படம் முடியட்டும். பேசலாம் என்றார். |