|
எந்திரனுக்கு பிறகு? ரஜினி பற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஆனால் அவரது இலக்கு சினிமா அல்ல என்று கோடம்பாக்கத்திலிருந்து வருகின்றன சில தகவல்கள்! அப்படின்னா? ஹையா... ஜாலி என்று ரசிகர்கள் ஆனந்தப்படவும் முடியாது. ஏனென்றால் அவரது இலக்கு அதுவும் இல்லையாம்.
இமயமலைக்கு போய் சாமியாராயிடுவார்னு சொல்லப் போறீங்க. வேற வேலை இருக்கு. ஆள விடுங்கப்பா என்று அடுத்த செய்திக்கு தாவுகிற அன்பர்களுக்கு....
ரஜினி தனது குடும்பத்தினர் அனைவருக்குமான சொத்துக்களை பிரித்துக் கொடுத்துவிட்டாராம். மகள்கள் இருவருக்குமான சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது ஒரு தகப்பனின் கடமைதான். ஆனால் தனக்கும் மனைவிக்கும் கூட தனித்தனியாக சொத்துக்களை பிரித்துக் கொடுத்திருப்பதாக உலா வரும் செய்திகள்தான் சிந்திக்க வைக்கின்றன. இமயமலை அருகில் ஒரு பெரிய இடத்தையே சொந்தமாக வாங்கிப் போட்டிருக்கும் ரஜினி அங்கே ஒரு கோவிலையும் கட்டி வருகிறாராம். இனி வருடத்திற்கு ஒருமுறையோ, அல்லது இருமுறையோதான் சென்னைக்கு வருவாராம். மற்ற நாட்கள் எல்லாம் அவருக்கு அதுதான் வாசஸ்தலம் என்கிறார்கள்.
தலைவரு பத்தி எவ்வ்வ்வளவோ சொல்லிட்டாங்க. இப்போ இதுவுமா? நீங்க பாட்டுக்கு எழுதுங்க. அவரோட ரூட்டே தனிதான் என்று இப்போதும் நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவரது தீவிரமான ரசிகர்கள்! |