|
கட்டி தங்கம் வெட்டியெடுத்து காதல் என்னும் சாறு பிழியுற வயசுதான் ஸ்ரேயாவுக்கு. ஆனால் இதுவரைக்கும் வரவில்லையாம் அந்த பாழாப்போன காதல். வயசு ஏறிகிட்டே போவுது. கல்யாணத்துக்கு வரன் பார்க்க வேண்டியதுதான் என்று அவர் காதுபடவே பேச ஆரம்பித்திருக்கிறார்களாம் வீட்டில். எப்படியோ இந்த தகவல் கசிந்து இன்டஸ்ட்ரியில் பரவ, அவரவர் கைகளிலும் மேட்ரிமோனியல் ரேஞ்சுக்கு பயோ டேட்டா!
இருந்தாலும் மனசுக்கும் கேரியருக்கும் எவ்வித சுளுக்கும் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரே. புதிய படங்களில் நடிக்க கதை கேட்டுக் கொண்டிருக்கிறார் இப்போதும். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் தங்கியிருந்த தாஜ் ஹோட்டலுக்கே ஒரு இயக்குனரை வரவழைத்த ஸ்ரே, கதையை கேட்டு கண்களை விரித்தாராம். அடேயப்பா... பயங்கரம். பிரமாண்டம். இந்த சப்ஜெக்டை பண்ணனும்னா ஏகப்பட்ட கோடிகள் ஆவுமே? அதுல என்னோட சம்பளமே 75 லட்சம் போயிரும். இன்னொரு பெரிய ஹீரோவா போட்டிங்கன்னா அதுக்கு நாலு கோடி. எப்பிடி சமாளிப்பீங்க என்றாராம்.
அட, கதையை கேட்டமா? கைநீட்டி அட்வான்சை வாங்கினோமான்னு இல்லாமல் இவ்வளவு இன்வால்வ் ஆகுதே பொண்ணு. இதுதான்யா தமிழ்சினிமாவின் கண்ணு என்றெல்லாம் ஆனந்த லஹரி வாசிக்கிறார் அந்த புது இயக்குனர். சந்தடி சாக்குல தன் சம்பளத்தையும் சொல்லிச்சு பாருங்க. அதுதான் ஸ்ரேயாவோட ஸ்டைல்!
|