|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்

மகள் சவுந்தர்யா திருமணம்
ரஜினியின் 'வராதீங்க' அறிக்கை!

Tamanna - Trisha

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யாவின் திருமணம் நாளை (செப்-3) சென்னையில் நடைபெற இருக்கிறது. ஒரு காலத்தில் ரஜினி நடிக்கும் படப்பெட்டியை ரிலீஸ் தினத்தன்றே கடத்திச் செல்ல உத்தரவிட்ட பா.ம.க பிரமுகர்களுக்கு கூட இந்த திருமணத்திற்கு நேரில் சென்று அழைப்பிதழ் வைத்து தனது 'பெரிய மனசை' உறுதிப்படுத்தினார் ரஜினி.

நக்கீரன் கோபால் போன்ற பத்திரிகையாளர்களில் முக்கியமானவர்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழ் வைத்தார் ரஜினி. இப்படி எதிரிகள், நண்பர்கள் என்று எல்லா தரப்பையும் நேரில் சென்று மதித்த ரஜினி, தன் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு எப்படி அழைப்பிதழ் வைக்க முடியும்? ஆனால் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். வாங்க என்றா? வராதீங்க என்று!

சென்னையின் இட நெருக்கடி, போக்குவரத்து நெரிசல் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ரசிகர்களிடம் அவர் வைத்திருக்கும் வேண்டுகோள் இதுதான். "என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப்பெருமக்களுக்கு என்னுடைய அன்பான வணக்கங்கள். எனது மகளின் திருமணத்தை ரசிகர்கள் நேரடியாக வந்து பார்க்க வேண்டும். வாழ்த்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தொலைபேசி மூலமாகவும், தபால் மூலமாகவும் எனக்கு தகவல் வந்து கொண்டு இருக்கிறது.

இதற்காக ரசிகர்களை அழைப்பதற்கு ஆசையாக இருந்தாலும் சென்னை நகரின் இட நெருக்கடி காரணமாகவும், போக்குவரத்து இடையூறுகள் கருதியும் ரசிகர்களை அழைக்க முடியவில்லை என மிக வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன். மணமக்களுக்கு உங்களின் நல்லாசிகளை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..."

அவர் வரச்சொல்லா விட்டால் என்ன. சவுந்தர்யாவை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன் என்று ஆங்காங்கே போஸ்டர்கள் முளைக்காமலா போய்விடும்?

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter