|
பாலாவின் எல்லா படத்திலும் ஒரு ரீமிக்ஸ் பாடல் இருக்கும். சூப்பர் ஹிட் பாடல்களில் இருந்து சில வரிகளை எடுத்துப் போட்டு இந்த அல்வாவை கிண்டியிருப்பார் பாலா. பிதாமகன் படத்தில் வரும் சிம்ரனின் டான்சும் அந்த பாடலும் இன்னும் நினைவுகளில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருப்பதை பலரும் ஒப்புக் கொள்வார்கள்.
தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் அவன் இவன் படத்திலும் அப்படி ஒரு பாடலை வைத்திருக்கிறாராம் பாலா. சிம்ரன் மாதிரி இந்த படத்திலும் ஒரு முன்னணி நாயகியை ஆட வைக்க வேண்டும் என்பது அவரது ஆசை.
அனுஷ்கா, த்ரிஷா, தமன்னா என்று அவரது மனக்கணக்கு வெவ்வேறு நடிகைகளை நோக்கி இருந்தாலும், வாய்ப்பை பறித்துச் செல்கிறவர் அநேகமாக தமன்னாவாகதான் இருக்கும் என்கிறார்கள். ஒரு பாட்டுக்கு ஆட மாட்டேன் என்ற கொள்கை வைத்திருக்கும் மேற்படி நடிகைகள் பாலாவுக்காக இந்த கொள்கையை குழி தோண்டி புதைக்கவும் தயாராக இருக்கிறார்களாம்.
ஆர்யாவுக்கும் விஷாலுக்கும் பொருத்தமானவராகவும் நெருக்கமானவராகவும் இருக்க வேண்டும் என்பதால் அந்த இடத்தை பிடிக்கிற அதிர்ஷ்டம் த்ரிஷாவுக்கும் அதிகம் இருக்கிறதாம். அட... இதிலுமா போட்டி?
|