|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்

குவார்ட்டர் கட்டிங் கதை
வசதிக்கேற்ப சுருங்கிய தமிழ்!

Pushkar - Gayathri

'வர வர தமிழு வசதிக்கேற்ப குறைஞ்சுதாம்'ங்கிற கதைதான் இது. புஷ்கர் காயத்தி தம்பதிகள் இயக்கும் குவார்ட்டர் கட்டிங் என்ற படத்தின் தலைப்பு 'வ'

அப்படின்னா? யாருக்கு புரியுது... ஒரு வேளை இந்த 'வ' வுக்கு தமிழ் அகராதியை புரட்டி ஏதாவது அர்த்தம் சொல்வார்கள். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற இருக்கிறது. படத்தின் கதை பற்றி லேசாக கோடம்பாக்கத்தில் கசிய ஆரம்பித்திருக்கிறது. நள்ளிரவில் கடை அடைக்கப்பட்ட பிறகு குவார்ட்டர் சாப்பிட ஆசைப்படும் இரண்டு நண்பர்கள் சந்திக்கிற பிரச்சனைகள்தான் கதையாம். (ரொம்ப பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்குமே)

இதே ஸ்டைலில் ஹாலிவுட்டில் ஒரு படம் வந்திருக்கிறது. 'ஹெரால்டு அண்டு குமார் கோஸ் டூ வொயிட் கேஸ்ட்ல்' என்பதுதான் அந்த படத்தின் பெயர். நள்ளிரவில் பர்கர் சாப்பிட ஆசைப்படும் இரு நண்பர்கள் கடைக்கு செல்ல, அங்கு சந்திக்கும் பிரச்சனைகள்தான் கதை. இந்த படத்தைதான் புஷ்கர் காயத்ரி தம்பதிகள் காப்பி அடித்துவிட்டார்களோ என்று கிசுகிசுப்பு எழுந்திருக்கிறது. என்றாலும், சொல்ல வந்த கதையை சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்கிற விதத்தில் இந்த இயக்குனர்களுக்கென்று தனி திறமை இருக்கிறது. மூலக்கதை எதுவாக இருந்தால் என்ன? இரண்டரை மணி நேரம் பொழுது போக்குகிற மாதிரி இருந்தால் போதாதா?

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter