|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
சாமியார் இமேஜ்ல சங்கு
-தப்பித்த நடிகையின் குடும்பம்!

சாமியார், மாமியார் வீட்டுக்கு (?) போவாரா என்ற சர்ச்சைகள் ஒருபக்கம் இருக்கட்டும். சாமியார் பேரை சொல்லி, ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் பாட்டு வாங்கிய ஒரு நடிகையை பற்றிய செய்தி இது.

வீடியோ சர்ச்சை வெளியாவதற்கு சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு படப்பிடிப்பில் இருந்தார் யுவராணி. 'நானே எனக்குள் இல்லை' என்ற படம்தான் அது. நடிகை ஜெயச்சித்ராவின் மகன் பாபு இப்படத்தின் ஹீரோ. அம்மாதான் படத்தின் டைரக்டர்.

ரவுண்ட் டிராலி ஷாட். யுவராணியை சுற்றி சுற்றி வந்து ஹீரோ வசனம் பேசுவது போல காட்சி. ஷாட்டின்போது யுவராணி கழுத்தில் இருக்கிற டாலரை கவனித்துவிட்டாராம் ஹீரோ. "அந்த டாலர்ல ஒரு சாமியார் படம் இருக்கே, அவரு அவ்வளவு சக்தி வாய்ந்தவரா?" என்றாராம் யுவராணியிடம். ஆடு அமைதியா இருந்தாலே மந்திரிச்சு மஞ்ச தேய்ச்சுவிடுற ஏரியாதான் சினிமா. இதில், தானே வந்து ஒரு ஆடு விசாரிச்சா சும்மா விடுவாரா யுவராணி. "அவரு வல்லவரு, நல்லவரு, வந்து பாருங்க மகிமையை" என்றெல்லாம் அவிழ்த்துவிட, அம்மாவிடம் பர்மிஷன் கேட்டாராம் ஹீரோ பாபு.

ஆத்திரமடைந்த ஜெயச்சித்ரா, "வந்தோமா நடிச்சோமான்னு இல்லாம ஏன் என் புள்ளைய இப்படி கெடுக்கிறீங்க. எனக்கு அதில நம்பிக்கை இல்லை. இனிமே அவனே கேட்டாலும் என்கரேஜ் பண்ண வேண்டாம்" என்றாராம் கறாராக. அடுத்த வாரத்திலேயே சாமியார் இமேஜ்ல சங்கு ஊதியது விதி. யுவராணியை அழைத்த ஜெயச்சித்ரா "அப்பவே சொன்னேன், கேட்டீங்களா" என்றாராம்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter