|
ஜுன் மாதம்தான் ராவணா ரிலீஸ். ஆனால் மே மாதமே அதை காணும் பாக்கியம் ஒரு சிலருக்கு வாய்க்கப் போகிறது. கான்ஸ் திரைப்பட விழாவுக்கு வரப்போகும் ரசிகர்களுக்குதான் இந்த அதிர்ஷ்டம்..
தமிழ்சினிமாவை உலகமெல்லாம் கொண்டு சென்ற பெருமை மணிரத்னத்திற்கு உண்டு. இவருக்கு பிறகுதான் இப்படி ஒரு சந்தை இருப்பதே பல இயக்குனர்களுக்கு தெரிய வந்தது. உப்புமா பட பிரஸ்மீட்டில் கூட, "இந்த படத்தை வேல்டு திரைப்பட விழாக்களுக்கு அனுப்புவீங்களா?" என்று கூசாமல் கேட்கிற நிருபர்களை பற்றியும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். போகட்டும்...
ராவணா எப்போது கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறதாம்? மே 15ந் தேதி என்று முடிவு செய்திருக்கிறார் மணிரத்னம். இந்த விழாவில் கலந்து கொள்ள இவருடன், அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம் ஆகியோரும் போகிறார்களாம்.
இதே திரைப்பட விழாவில் தனது விண்ணை தாண்டி வருவாயா படத்தையும் ஸ்கீரின் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் கவுதம் மேனன்! டாலர்ல சம்பாதிக்குது தமிழ்ப்படம். காலரை தூக்கிவிட்டுக்கோங்க மக்களா...
|