|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
சுற்றி நின்றால் எப்படி மூட் வரும்?
-விவேக் ஓபராய் ஜாலி பதில்!

விவேக் ஓபராய் நடித்த பிரின்ஸ் என்ற படத்தை தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப் போகிறார்கள். இதையட்டி சென்னைக்கு வந்திருந்தார் ஓபராய். மாலை ஐந்தரைக்கு பத்திரிகையாளர்களை வரவழைத்திருந்தார்கள். ஆனால், கோவையிலிருந்து சென்னை வரவேண்டிய விவேக், பிளைட்டை தவறவிட்டு விட்டாராம். சென்னை விமான நிலையத்திற்கு வந்து சேரவே ஆறரை ஆனதால், டிராபிக்கில் கார் பிதுங்கி சத்யம் தியேட்டரை வந்தடைய இரவு எட்டரையை தாண்டியது. அதுவரைக்கும் காத்திருந்த நிருபர்களுக்கு அவரது சிரிப்பு, ஏராளமான கலோரிகளை உள்ளடக்கிய சிரப்!

இந்த படத்தில் அவருக்கு மூன்று ஜோடிகள். ட்ரெய்லரில் ஒரு ஜோடிக்கு அவர் கொடுத்த லிப் கிஸ்சை விடாமல் பற்றிக் கொண்டார்கள் நிருபர்கள். இந்த கிஸ்சுக்கு பதினெட்டு டேக் ஆச்சாமே? என்று கலாய்க்க, அதிர்ந்தே போனார் விவேக். டில்லி நிருபர்கள் பத்து முறை ரீ டேக் எடுத்தாங்களாமே என்றார்கள். நீங்க அதுக்குள்ளே எட்டு டேக்கை அதிகரிச்சுட்டீங்களா என்றவர், முத்த காட்சிகள் எடுக்கும் போது எப்படி எடுப்பார்கள் என்பதை பற்றி ஒரு லெக்சரே கொடுக்க ஆரம்பித்தார். நம்மை சுற்றி அத்தனை பேர் நிற்கும் போது வேறு மூட் எப்படி வரும் என்பது அவரது நெத்தியடியான கேள்வி.

வந்த இடத்திலும் வாழ்த்துக்களை வாங்கிக் கொண்டு போகும்படியாக ஒரு விஷயத்தை சொன்னார். 1200 பெண் குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்கிறாராம். அவர்களுக்கு தேவையான உணவு, உடை எல்லாவற்றையும் இவருக்கு சொந்தமான சமூக சேவை அமைப்பே கவனித்துக் கொள்கிறதாம்.

போதும் விடுங்க... படத்தை ஓட வச்சுருவோம்!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter