|
'அங்காடி தெரு' படத்தில் காட்டப்படும் கடை யாருடையது? அங்கேயே பர்மிஷன் வாங்கி படம் எடுத்திட்டு அவருக்கே கடப்பாரையை செருகிட்டீங்களே என்றெல்லாம் வசந்தபாலனிடம் கேட்டு குடைகிறார்கள் பலர். ஆனால் இந்த படத்தை அவர் எடுத்தது பலரும் நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரி 'அந்த' கடையில் இல்லவே இல்லை.
சவுந்திரபாண்டியன் ஸ்டோர் என்ற கடையில்தான் இந்த படத்தை எடுத்தாராம் வசந்தபாலன். அதற்கு முன்பாக மேற்படி 'விவகார' கடையில் இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து கண்காணிக்க வேண்டும் என்பதும் அவரது ஆசையாக இருந்திருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் அனுமதி கிடைக்காத நிலையில், வெளியில் இருந்தே வாட்ச் பண்ணினாராம்.
சம்பந்தப்பட்ட கடையில் இருந்து பிரச்சனை வந்திருக்குமே? அவரிடமே கேட்டோம். "இது பற்றி இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க" என்று ஒதுங்கிக் கொண்டார். "ஒருவேளை பிரச்சனை ஆனா கூட எங்கிட்டயிருந்து அதுக்கு எந்த பதிலும் இல்லை" என்பதுதான் அவரது ஷார்ப்பான பதிலாக இருக்கிறது.
படத்தில் நீங்கள் காட்டும் சாப்பாட்டு கூடமும், ஊழியர்கள் தங்குமிடமும் கொஞ்சம் அதிகப்படுத்தி சொல்வது போல இருக்கிறதே என்ற இன்னொரு கேள்விக்கு வசந்தபாலனின் பதில்...
"நான் காண்பித்தது நிஜத்தில் பாதிதான்!" |