|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
12 கிலோ எடை குறைந்தது
அஜீத்தின் அல்டிமேட் மாற்றம்!

நாளைதான் (ஞாயிற்றுக்கிழமை) ஐரோப்பிய நாடுகளுக்கு கிளம்புகிறார் அஜீத். தனது பயணத்தை சற்று ரகசியமாகவே வைத்திருக்க விரும்பினாராம். திடீரென்று விமான நிலையம் செல்லும் வழியில் 'தலயே வென்று வா. தரணியை தின்று வா' என்றெல்லாம் அபத்தமாக யாராவது போஸ்டர் ஒட்டிவிட்டால் என்னாவது என்ற அச்சம்தான் காரணம்!

தல யின் மனசில் இடம் பிடிக்க என்ன வழிகள் என்று தவித்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் இப்படி செய்துவிடலாம் அல்லவா? அதற்காகதான் இந்த முன்னெச்சரிக்கை. அது போகட்டும்... இந்த முறை அவரது ஐரோப்பிய பயணம் கார் ரேசுக்காகதான் என்பது அனைவரும் அறிந்த செய்திதான். தெரியாத செய்தி...

தனது எடையில் சுமார் 12 கிலோவுக்கு மேல் குறைத்திருக்கிறாராம். ஏன்? இந்த ரக கார்களில் ஒரு ஆள் அமரதான் இடம் இருக்கும். அதிலும் குறிப்பிட்ட அளவு எடை குறைவாக இருந்தால்தான் வசதியாக அமரவே முடியும். அதனால்தான் இந்த எடைக்குறைப்பு.

போகும்போது இப்படியிருந்தாலும் திரும்பி வரும்போது வெற்றிக் கோப்பைகளுடன் வரப்போவதால் வெயிட்டாக இருப்பார்... சந்தேகமே வேண்டாம்!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter