|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
ஆறு மாசம்... ஆறுமாசம்...
-பாலா-அமீர் பம்மாத்து!

அமீரின் படங்களுக்கு ஆந்திராவிலும் மவுசுதான்! அவரது முந்தைய படங்கள் டப்பிங் செய்யப்பட்டு அங்கு ரிலீஸ் செய்யப்படுகின்றன. இந்த முறை நேரடியாகவே இறங்கிவிட முடிவெடுத்திருக்கிறாராம் அமீர். அதாவது நேரடி படமாக்கல்!

ஜெயம் ரவி நடிப்பில் ஆதிபகவன் என்ற படத்தை இயக்கப் போகிறார் அமீர். நண்பர் பாலாவை போலவே தொழில் விஷயத்தில் அமீரும் ஸ்லோதான். படத்தில் ஒரு நிழல் வந்தால் கூட அதிலும் பர்பெக்ஷன் பார்க்கிற நேர்த்திதான் அமீர்-பாலாக்களின் ஆமை வேகத்திற்கு காரணம். ஆனால் சொல்லி வைத்தாற் போல இரண்டு பேருமே ஆறு மாதத்திற்குள் அடுத்த படத்தை ரிலீஸ் செய்துவிடுவேன் என்று தனித்தனியாக பேட்டியளித்தார்கள்.

அதற்கான வேகம் பாலாவிடம் இல்லை என்பது கடந்த சில வாரங்களாக நடக்கும் தடதடப்பில் தெரிகிறது. ஆனால் அமீர் விஷயத்தில் இந்த உறுதி, இறுதி வரைக்கும் தொடரும் போலிருக்கிறது. ஆச்சர்யம் என்னவென்றால் தெலுங்கில் ராணாவையும், தமிழில் ஜெயம் ரவியையும் வைத்து எடுக்க நினைத்திருக்கும் இந்த ஆதிபகவனை இரண்டு மொழிகளிலும் சேர்த்து ஆறுமாதத்தில் முடித்துவிட திட்டமிட்டிருக்கிறாராம் அமீர்.

ஆசையே அலை போலே.... நாமெல்லாம் அதன் மேலே...

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter