|
கோடம்பாக்கத்தில் என்ட்ரி கொடுத்த கொஞ்ச நாட்களிலேயே 'டேஸ்ட்'டுள்ள தயாரிப்பாளர் என்ற பெயரை தட்டிச் சென்றிருக்கிறார் துரை.தயாநிதி. மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் என்ற பந்தாவையெல்லாம் ஓரம்கட்டி விட்டு நல்ல கதைகள் கேட்பதில் அதிக நேரம் செலவிடுகிறாராம்.
இவரது தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய படம் தூங்கா நகரம். மதுரை என்றாலே அலர்ஜியாகிற அளவுக்கு வசவச என்று வந்து குவிகின்றன படங்கள். இந்த நேரத்தில் மேலும் ஒரு மதுரை கதை? இந்த சலிப்பு ஏற்படாவண்ணம் கதை இருக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தாராம் தயாநிதி. இவரது நம்பிக்கையை வசப்படுத்திக் கொண்டு வேகமாக வளர்ந்து வருகிறது தூங்கா நகரம்.
இப்படத்தை பற்றி இப்போதே ஒரு பரபரப்பு கிளம்பியிருக்கிறது. ஒரு காட்சியில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும் நடிக்கிறார் என்பதுதான் அது. முதலில் மறுத்த அமைச்சர், மகனின் வற்புறுத்தலால் தலைகாட்ட சம்மதித்தாராம். படத்திலும் அமைச்சராகவே தோன்றுகிறாராம். ஒரு சீன் வந்தாலும் கட் அவுட் அவருக்குதான் போல....! |