|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
வெற்றிப்படத்திற்கு பின்?
-வெறுமையுடன் டைரக்டர்!

ரேணிகுண்டா படத்தின் இயக்குனர் பன்னீர்செல்வம் குளுகுளு ஊட்டியிலிருக்கிறார். வேறென்ன? கதை விவாதம்தான்! ரேணிகுண்டா படத்தையடுத்து தனது மகன் ஜானியை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்குமாறு கேட்டிருந்தார் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. ஆனால் தெலுங்கில் கோடி ரூபாய் சம்பளம் என்று ஆந்திராவுக்கு இடம்பெயர்ந்தார் பன்னீர். போன நேரம் கெட்ட நேரம் போலிருக்கிறது. கிளாப் கட்டையை தூக்கி கூட வேறிடத்தில் வைக்க முடியாதளவுக்கு தடை. ஒரு கோடி சம்பளம் பேசியிருந்தாலும் வாங்கிய அட்வான்ஸ் என்னவோ வெறும் ஐந்து லட்சம்தானாம்.

அதை நீங்களே வச்சுக்கோங்க. தேவைப்பட்டா கூப்பிடுறோம் என்று திருப்பி அனுப்பிவிட்டது தெலுங்கு பூமி. என்னதான் செய்வார் பன்னீர்? நீதான் என் சாமி என்று திரும்பவும் நிக் ஆர்ட்சில் தஞ்சமடைய, அவரும் இழுத்தடிக்கிறாராம் இப்போது.

இடைபட்ட நேரத்தில் ஒரு ஸ்கிரிப்டை தயாரித்து வைக்கலாமே என்றுதான் ஊட்டிக்கு பயணமாகியிருக்கிறார் பன்னீர். நல்ல படம் கொடுத்திருந்தாலும், நாளும் கிழமையும் நங்கூரம் போடுதே மனுஷனுக்கு!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter