|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
ரஜினி-கமல்-தோனியுடன்...
கேப்டன் டிவி துவக்கவிழா!

அரசியல் பக்கம் ஒதுங்கினாலும், சக நட்சத்திரங்களை கைக்குள்ளேயே வைத்திருக்கிறார் விஜயகாந்த். ஏப்ரல் 14 ந் தேதி நடைபெறவிருக்கும் கேப்டன் டிவி யின் துவக்க விழாவில் அத்தனை நட்சத்திரங்களும் ஆஜராவார்கள் போலிருக்கிறது. முக்கியமாக கமல், ரஜினியை அழைக்க தீவிரம் காட்டி வருகிறாராம் விஜயகாந்த்.

'உங்களில் ஒருவர் துவங்கப் போகும் சேனல் இது'. இந்த ஒரு வார்த்தையே போதுமானதாக இருக்கிறதாம் அத்தனை பேரையும் வரவழைக்க! இவர்களுடன் விழாவை மேலும் கலகலப்பாக முடிவு செய்த விஜயகாந்த், பிரபல கிரிக்கெட் வீரர் தோனியையும் அழைத்திருக்கிறாராம். 12 ந் தேதி சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள வருகை தரும் தோனி, இவரது அழைப்பை ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்.

கிரிக்கெட் கேப்டனும், சினிமா கேப்டனும் ஒன்று சேரும் விழா என்பதால் இப்போதிலிருந்தே விழா ஏற்பாட்டை தடபுடலாக கவனிக்க ஆரம்பித்திருக்கிறது ஒரு குழு. விழாவை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடத்தவிருக்கிறார்களாம்.

பின்குறிப்பு- கேப்டன் டி.வியில் ஒளிப்பரப்பாகவிருக்கும் முதல் படம் கேப்டன் பிரபாகரன்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter