|
தனியாக கட்டிங் கொடு. இது ஏதோ, 60 அல்லது 90 கட்டிங் அல்ல. லட்சங்களில் கேட்கப்படும் கட்டிங்! ஆனாலும் கும்பிட போன தெய்வத்துக்கு குறுக்கே நிற்கிற பூசாரியாச்சே என்று கொட்டி அழுகிறார்கள் கோடம்பாக்கத்தில்!
இப்படி கட்டிங் போடுகிற பூசாரி யார் தெரியுமா? கலையுலக இளவரசியாக கருதப்படும் தமன்னாவின் அப்பாதான். என் பொண்ணுக்கு 75 லட்சமோ 80 லட்சமோ கொடுக்க வேண்டியதை கொடுங்க. ஆனால் அதில சம்பந்தமில்லாமல் எனக்கொரு கட்டிங் கொடுங்க என்கிறாராம்.
ஒருவேளை இதற்கு ஒப்புக் கொள்ளாத யாராக இருந்தாலும் "என் பொண்ணு இந்த படத்தில நடிக்க மாட்டா" என்று குறுக்கே விழுந்து தடுக்கிறாராம். அப்பாவையும் அலட்சியம் செய்ய முடியாமல், வருகிற தயாரிப்பாளர்களையும் தவிக்க விடாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார் தமன்னா.
ஹ§ம், நாற்பது கிலோ தாஜ்மஹால் மனசில இப்படி 80 கிலோ பாரம்! |