|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
படத்தை நிறுத்து, பஞ்சாயத்தை கூட்டு!
கார்த்தி படத்தை தடுத்த இயக்குனர்

நாலைந்து நாட்களாக கொந்தளித்துக் கொண்டிருக்கிறது ஒரு பிரச்சனை. பருத்திவீரன் கார்த்தி நடிக்கும் புதிய படம் ஒன்றின் படப்பிடிப்பை இயக்குனர்கள் சங்கம் தடுத்து நிறுத்தியிருக்கிறது. "என் பிரச்சனையை சரி செய்யாமல் படத்தை எடுக்க விடக்கூடாது" என்று தெனாவட்டு இயக்குனர் கதிர் கேட்டுக் கொண்டதால்தான் இந்த நடவடிக்கை. என்னவாம்?

தெனாவட்டு படம் முடிந்ததும், தான் நடிக்கும் படத்தை இயக்கித்தர வேண்டும் என்று கார்த்தியின் ஸ்பெஷல் அழைப்பின் பேரில் வந்தார் கதிர். விக்கிரமார்குடு என்ற தெலுங்கு படத்தைதான் ரீமேக் செய்ய இவரை அழைத்தார்கள். நாற்பது லட்சம் சம்பளம் பேசி பத்து லட்சம் அட்வான்சும் தரப்பட்டது. ஆனால் திடீரென்று இவரை படத்திலிருந்து நீக்கிவிட்ட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, சிவா என்பவரை இயக்குனராக்கிவிட்டார். பிரச்சனை அத்தோடு போயிருந்தால் பரவாயில்லை. கொடுத்த அட்வான்ஸ் பத்து லட்சத்தை திருப்பி கேட்டார்களாம்.

தெனாவட்டு படத்திற்கு பிறகு மீண்டும் ஜீவாவை வைத்து இயக்கும் படத்தையும் கார்த்திக்காக விட்டுக் கொடுத்துவிட்டு வந்தாராம் கதிர். அதில்லாமல் ஒரு வருடம் சும்மாவே உட்கார வைத்தார்களாம். இவ்வளவுக்கு பிறகு வேறொரு இயக்குனரை போட்டதும் அல்லாமல் பத்து லட்சத்தையும் திருப்பிக் கொடு என்றால் எப்படி? இதுதான் கதிரின் கேள்வி. பத்து நாட்களாக புதிய படத்தின் ஷ§ட்டிங் நடந்து வருகிறது. கதிர் கொடுத்த புகாரின் பேரில் இயக்குனர்கள் சங்கம் தலையிட்டு படப்பிடிப்பையும் நிறுத்திவிட்டது.

பின்பு நடந்த பஞ்சாயத்தில் நடந்த தவறுக்காக பத்து லட்சத்தை விட்டுக் கொடுத்தார்களாம் கார்த்தி தரப்பில்! கார்த்தி வேண்டாம் என்றாலும் முன்னணி சேனல் தயாரிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் கதிர்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter