|
பாலா படத்தில் நடிக்கப் போகும் நடிகர்கள் யாராக இருந்தாலும் முதலில் முள் கிரீடம். அப்புறம்தான் மலர்கொத்து. ஆனால் தனது பாணியை கொஞ்சம் மாற்றி ஒட்டுமொத்த யூனிட்டும் இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறாராம் பாலா.
காலையில் இருந்து மாலை வரை ஒரே ஒரு ஷாட் மட்டுமே கூட சில நேரங்களில் எடுப்பார் அவர். அதுமட்டுமல்ல, 30 டேக், 40 டேக் என்பதெல்லாம் அவரது வேலையில் சாதாரணம். பேசிய வசனத்தையே பேசி, நின்ற இடத்திலேயே நின்று அலுத்து சலித்துப் போய் அக்கடா என்று ஷாட்டை ஓகே செய்வதற்குள் விழி பிதுங்கி போய்விடுவார்கள் ஹீரோக்கள். ஆனால்...?
போயே போச். இப்போதெல்லாம் ஒன்று அல்லது இரண்டு ஷாட்டுகளில் டேக்கை ஓகே செய்து விடுகிறாராம் பாலா. அவன் இவன் படத்தின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்புக்கு இன்னும் போகா விட்டாலும் எடுத்த காட்சிகளில் ஒன்றே ஒன்று கசிந்தது நம் காதுகளுக்கு.
படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் ஜனனி ஐயர். இவரது வாக்கி டாக்கியை திருடிக் கொண்டு ஓடிவிடுவாராம் விஷால். இந்த காட்சியை தென்காசி பகுதியில் எடுக்கும்போது ஒரே கூட்டம். அக்கம் பக்கத்து ஜனங்கள்தான். ஆனால் அவர்கள் மீது எரிந்து விழாமல் படம் பிடித்தாராம் பாலா. (தப்பு பண்ணீட்டீங்களே, அன்றைய தினம் என்ன எடுத்தீங்கன்னு போட்டு கொடுத்திட்டாய்ங்களே...) |