|
ஒரு படத்திற்கு 175 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் வடிவேலு. நாளொன்றுக்கு பத்து லட்சம் சம்பளம் வாங்குகிற வடிவேலு, இந்த படத்திற்கு எவ்வளவு வாங்கியிருப்பார் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம். அப்படியென்ன பெரிய படம் அது?.
நிஜமாகவே பெரிய படம்தான் என்கிறது கோடம்பாக்கத்து குருவி. ஆதம்பாவா என்பவர் இயக்கப் போகும் இப்படத்தை 52 நாடுகளில் படமாக்கப் போகிறார்களாம். வடிவேலுவுக்கு இதில் 25 வேடங்கள்!!!
பத்து வேடத்தில் நடித்த கமலையே கின்னஸ் சாதனையில் இடம் பெற செய்ய வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆர்வம். 25 ரோலில் ஒரு நடிகர் நடித்தால், யாரையும் கேட்காமலேயே அல்லது யாரும் சொல்லாமலேயே கின்னசில் இடம் பிடித்துவிடலாமல்லவா? இந்த ஒரு பிட்டை போட்டே வடிவேலுவை வளைத்திருக்கிறார் ஆதம்பாவா. படத்திற்கு 'உலகம்' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
ஒரே காட்சியில் 25 வடிவேல்களும் ஒன்றாக பேசி நடிக்கப் போவதை இந்த நாடு பார்க்கதானே போகிறது. ஆனாலும் அதில் கண்கொள்ளாக் காட்சியாக ஒரு விஷயம் இடம்பெறப் போகிறது. ஒரு வடிவேலுவுக்கு நித்யானந்தா வேடம்! அப்படின்னா ரஞ்சிதா யாருன்னு கேட்றாதீங்க. கதைய அப்படி கொண்டு போகலையாம் ஆதம்பாவா.
|