|
இது வெள்ளி விழா படமா? வெளங்காத ஜடமா? என்று ஒரு படத்தை முடிவு செய்வதற்கு முன்பே அதற்கான அவகாசம் கூட கொடுக்காமல் தியேட்டரை விட்டு துரத்தியடிக்கப்படும் படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. அதில் சேர்ந்து கொண்ட லேட்டஸ்ட் படம் முன்தினம் பார்த்தேனே.
ஏ சென்ட்டர் என்று சொல்லப்படும் நகர்புற ரசிகர்களை சற்றே ஈர்த்த படம்தான் இது. அதற்குள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் சுமார் 20 தியேட்டர்களில் கெட் அவுட் சொல்லிவிட்டார்களாம் மு.தி.பா வுக்கு. வேதனை என்னவென்றால் இரண்டாம் நாளே சில தியேட்டர்களில் மூட்டை கட்டப்பட்ட படம் இது.
ஏன் இந்த அவல நிலை? வேறொன்றுமில்லை. எக்ஸாம் நேரம். குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றொர்களும் அவர்களுக்காக மாய்ந்து மாய்ந்து நேரத்தை செலவிட்டுக் கொண்டிருப்பார்கள். இன்னொரு பக்கம் ஐபிஎல். தேர்வு இல்லாத மாணவர்கள் கூட டி.வி க்கு முன்பாக உட்கார்ந்துவிடுகிற நேரம். இந்த நேரத்தில் ஒரு படத்தை ரிலீஸ் செய்வது எவ்வளவு ரிஸ்க் என்பதை தெரிந்தே ரிலீஸ் செய்திருக்கிறார்களே என்ற வருத்தம் மேலோங்குகிறது இதுபோன்ற படங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை பார்த்தால்.
இவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை நாங்கள் என்று சொல்வது போல இன்று அங்காடி தெரு படத்தின் அறிவிப்பு வந்திருக்கிறது. இன்னும் சில தினங்களில் படம் ரிலீஸ். தயாரான படத்தை இத்தனை வருடங்களாக மூட்டை கட்டி வைத்திருந்த தயாரிப்பு நிறுவனம், இந்த ரிஸ்க்கான நேரத்தில் ரிலீஸ் செய்கிறார்களே, முடிவு என்னாகுமோ என்ற பதற்றம் நல்ல பட ரசிகர்களுக்கு இருக்கிறது. அதையெல்லாம் மீறி அங்காடி தெரு வெற்றியடைந்தால் முதல் சந்தோஷம் நமக்குதான்!.
|