|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
11-வது இடம்தான் சூர்யாவுக்கு!
-போட்டுத் தாக்கும் பார்த்திபன்

ஆதவன் படத்தின் 100 வது நாள் விழா அடையார் பார்க் ஷெராட்டன் ஓட்டலில் நடந்தது. கமல்ஹாசன் கேடயங்களை வழங்க, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

கேடயங்களை பெற்றுக் கொள்ள வருகிற ஒவ்வொருவரை பற்றியும் தனக்கேயுரிய அலட்சிய நடையில் வர்ணனை செய்து கொண்டிருந்தார் கே.எஸ்.ரவிக்குமார். ஹாரிஸ் ஜெயராஜ் பற்றிய அவரது வர்ணனை இது! படத்தில் மூணு சூப்பர் ஹிட் பாடல்களையும் ரெண்டு சுமாரான பாடல்களையும் கொடுத்திருந்தார் ஹாரிஸ். இதே மாதிரி தொடர்ந்து கொடுக்கணும் என்றார். மேடையில் உட்கார்ந்திருந்தவர்கள் மட்டுமல்லாது விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களையும் பேச வைத்தார்கள்.

சற்று வெளிப்படையாகவே பேசினார் லிங்குசாமி. உதயநிதியோட தயாரிப்புல நான் ஒரு படம் பண்றதா இருந்திச்சு. என்ன காரணத்தினாலோ அந்த அட்வான்சை திரும்பி வாங்கிட்டார். ஆனால் திரும்பவும் அவர் கம்பெனிக்கு ஒரு படம் பண்ணணும் என்றவர், பையா நேரத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையை மறந்து பேசியது நல்ல விஷயம். எங்க படத்துக்கு கொடுத்திருந்த தேதியைதான் இந்த படத்துக்கு நயன்தாரா கொடுத்தாங்கன்னு நினைக்கிறேன் என்று அவர் சொல்ல, வெள்ளந்தியாக சிரித்தார் நயன்தாரா.

எல்லா மேடைகளிலும் வந்து கலக்கிவிட்டு போகும் பார்த்திபன் இந்த மேடையையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொருவரை பற்றியும் பேசிக் கொண்டே வந்தவர், நயன்தாரா பற்றி பேசும்போது இன்னும் கொஞ்சம் கூடுதல் அழகை சேர்த்தார் வார்த்தைகளில். "நயன்தாராவை யாரு பார்த்தாலும் ஆடிப்போயிருவாங்க. மற்றவங்களே இப்படின்னா ஆட வைக்கிறவரு பார்த்தா என்னாவாரு?" என்று சொல்ல, அடங்காத வெட்கத்தை இரண்டு கைகளாலும் மறைத்துக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தார் நயன்தாரா. (இதையே பத்திரிகைகாரன் சொன்னா கோவப்படுறாங்க. பார்த்திபன் சொன்னா சிரிக்கிறாங்களேய்யா...)

"கமலுக்கு அடுத்த இடத்திலேயும், அதற்கு அடுத்த இடத்திலேயும் கமல்தான் இருக்கார். அப்படி பார்த்தால் முதல் பத்து இடத்திலே அவருதான் இருக்கார். பதினொராவது இடம்தான் சூர்யாவுக்கு" என்று அவர் சொன்னதை பார்வையாளர்கள் ரொம்பவே ரசித்தார்கள்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter