|
சைலண்டாக மலேசியா போய்விட்டு வந்திருக்கிறார் அஜீத். எதற்காம்? வேறொன்றுமில்லை. ஃபார்முலா -2 ரேசுக்கான பயிற்சி ட்ரிப்தான் இது. ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொண்டு பெரும் வெற்றியோடு திரும்ப வேண்டும் என்பதுதான் அவரது அடங்காத ஆசை. சிறிது நாட்களாக சினிமாவே வேண்டாம் என்ற மூடுக்கு வந்திருக்கிறார் தல. ஒருவேளை இது போன்ற ரேஸ்களில் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தாலே ஒரு வருடத்திற்கு சினிமாவில் சம்பாதிக்கிற பணத்தை ஒரே நாளில் சம்பாதித்து விடலாம் என்ற கணக்கு இருக்கிறதாம் அவருக்குள்.
அதனால் சற்று வெறியோடுதான் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். இம்மாதம் இறுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணமாகிறார். இப்போது கிளம்புகிற அவர் திரும்பி வர மூன்று மாதங்கள் ஆகுமாம். அதனால் தனியாக பயணம் போய், குடும்ப நினைவுகள் வந்து அல்லாடுவதை விட அவர்களையும் அழைத்துப் போவதே மேல் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம். அப்படி சென்றால் இன்னும் மனசுத்தியோடு ரேசில் ஈடுபாடு காட்டலாமல்லவா? அதனால்தான் இந்த ஏற்பாடு.
சும்மா போனால் பிக்னிக்! குடும்பத்தோடு போனால் அதுதான் டெக்னிக்? |