|
சாதா நடிகர்களுடன் நடிக்கவே மாட்டார் சதா! ஆனால் அறிமுகமாகி இரண்டே படங்களில் நடித்த ஆர்.கேவுக்கு ஜோடியாகியிருக்கிறார். ஏன்?
வேறொன்றுமில்லை, பி.வாசு சார் படத்தில நடிக்கணும்கறது என்னோட நீண்ட நாள் ஆசை. கன்னடத்தில் ஆப்தரக்ஷா படத்தில் கூட, என்னை நடிக்க அழைத்தார். ஆனால் அப்போ என்னால கால்ஷீட் கொடுக்க முடியாதவளவுக்கு பிசியா இருந்தேன். அந்த படத்தை மிஸ் பண்ணிட்டேனேன்னு நான் நினைச்சு கவலைப்பட்டுக்கிட்டு இருந்தப்போதான் மீண்டும் அவரிடமிருந்து அழைப்பு.
அடிச்சு பிடிச்சுக்கிட்டு ஓடி வந்திட்டேன். புலிவேஷம் படத்தில என்னோட கேரக்டர் என்னன்னு கடைசி வரைக்கும் யாராலயும் யூகிக்கவே முடியாது. பொதுவா ஹீரோயின்களுக்கும் முக்கியத்துவம் தர்ற மாதிரி இருக்கும் அவரோட கதைகள். இந்த படத்திலும் அந்த நம்பிக்கை வீண் போகல என்றார் சதா.
முதல் இடத்து ஹீரோக்கள் எல்லார் கூடவும் வொர்க் பண்ணிட்டேன். அடுத்த வரிசை ஹீரோக்களை வச்சு இயக்கலையே என்ற எண்ணம் என் மனசில் இருந்துகிட்டே இருந்திச்சு. ஆர்.கே நடிச்ச படங்களை கூட நான் பார்த்ததில்லே. ஆனால் அவரோட டெடிக்கேஷன்தான் என்னை இந்த படத்தை இயக்க வச்சுது. நான் நினைச்ச மாதிரியே அடுத்த வரிசை ஹீரோக்களோட டிராவல் பண்ண உதவியா இருந்திருக்கார் ஆர்.கே என்றார் பி.வாசு.
இப்படத்தில் இன்னொரு முக்கிய ரோலில் நடிக்கும் கார்த்திக் குறித்து பி.வாசு சொன்னதையும் அப்படியே சொல்லிவிடுகிறோம். அவர் விட்டுட்டு போன இடத்தை யார் நிரப்ப போறாங்களோ என்று நினைச்சுட்டு இருந்தேன். அந்த இடத்தை நிரப்ப அவரே வந்திட்டார். அவருடடைய நடிப்பில் ஒரு துள்ளல் இருக்கும். அது கொஞ்சம் கூட குறையவே இல்லை. இப்பகூட அவர் ஹீரோவாக நடிக்கலாம்!
பி.வாசு சொல்வதை பார்த்தால், அவரது அடுத்த படத்தின் ஹீரோ கார்த்திக்காகவும் இருக்கலாம்! |