|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
பிரபல ஒளிப்பதிவாளர் மறைவு
-இன்று படப்பிடிப்புகள் ரத்து

இன்று ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறது தமிழ் திரையுலகம். பிரபல ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மறைவையட்டிதான் இந்த கண்ணீர் அஞ்சலி.

இருபெரும் இமயங்களான சிவாஜி, எம்ஜிஆர் நடித்த ஏராளமான படங்களை ஒளிப்பதிவு செய்தவர் பி.என்.சுந்தரம். தங்கப்பதக்கம், பட்டிக்காடா பட்டணமா, எங்கவீட்டு பிள்ளை, உயர்ந்த மனிதன் ஆகிய சூப்பர் ஹிட் படங்கள் இவரது ஒளிப்பதிவில் உருவானவைதான். தமிழ் படங்கள் மட்டுமல்ல, இந்தி, தெலுங்கு, மலையாள படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். பெப்சி அமைப்பின் செயலாளராகவும் இருந்தவர் சுந்தரம். 76 வயதில் இயற்கை எய்திவிட்ட இவர் ஐம்பது ஆண்டுகாலம் கலைசேவையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சைதாப்பேட்டை ஸ்ரீராம் காலனியில் உள்ள அவரது வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான திரைப்பட கலைஞர்கள் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter