|
அப்பாவின் ஆளுமையையும், உழைப்பையும் அப்படியே உள்வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார் ஸ்ருதி கமல். ஆல்ரவுண்டர் என்ற பாராட்டுகளை இப்பவே குவித்துக் கொண்டிருக்கிறார். இசை நடிப்பு என்று தன்னை அர்ப்பணிக்க தயாராகிவிட்ட ஸ்ருதி, ரீசண்ட்டாக கன்னட படம் ஒன்றுக்காக பாடிக் கொடுத்தாராம். சென்னையில் இருந்து பெங்களுருக்கு ஃபிளைட் பறக்கிற நேரம் கூட இல்லையாம் இவர் பாடிக்கொடுத்த நேரம்.
இதற்கிடையில் இன்னொரு தகவல்...
மும்பையில் புது இந்திப்பட போட்டோ ஷ¨ட்டுக்கு போயிருந்தாராம். 30 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் பால்கனி ஓரமாக நிற்க வைத்து படம் எடுத்தாராம் போட்டோகிராபர். அதுவும் ஆறடி ஹை ஹீல்சுடன்! சுற்றி நின்றவர்கள் பதறி ஆட்சேபிக்க, அதனாலென்ன என்று அசத்தலாகவும், துணிச்சலாகவும் போஸ் கொடுத்தாராம் ஸ்ருதி.
ஏங்க இப்படி? என்றவர்களுக்கு ஸ்ருதி சொன்ன பதில், நோ பெயின்.... நோ கெயின்! |