|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
ஃபிரண்ட்லி ஐஸ், அலட்சிய அஞ்சலி
-முணுமுணுக்கும் சினிமா வட்டாரம்

கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கு என்று முகத்தை சுளிக்கிறார்கள் சினிமா வட்டாரங்களில். எதிலும் அலட்சியம். எக்கச்சக்க எரிச்சல். இதுதான் அஞ்சலியின் முகமாக இருக்கிறது. ரெட்டச்சுழி ஆடியோ வெளியீட்டு விழாவில் இவரை பார்த்தவர்கள் அதிர்ந்தே போயிருப்பார்கள். அதிலும் முன்புற வரிசையில் உட்கார்ந்திருந்த பத்திரிகையாளர்கள் பலருக்கும் அதிர்ச்சி. ஏனாம்?

உலக அழகி ஐஸ்வர்யாராய் முன்னிலையில் படத்தின் பாடல்களை திரையிட்டார்கள். அதில் அஞ்சலியின் நடிப்பை பார்த்து வியந்திருப்பார் போலிருக்கிறது. கதாநாயகியான இவர் மேடையேறி வரும்போது அன்போடு நோக்கி ஃபிரண்லியாக ஒரு சிரிப்பு சிரித்தார் ஐஸ். ஆனால் அஞ்சலியின் முகத்தில் ஒரு சலனமும் இல்லை. இதில் சற்றே ஷாக்கானார் ஐஸ்வர்யா. ஒரு உலக அழகி நம்மையும் மதித்து சிரிக்கிறாரே என்ற பிரக்ஞையற்று எவ்வித ரீயாக்ஷனும் காட்டாமல் தன் சீட்டில் போய் அமர்ந்தார் அஞ்சலி. இதை கவனித்துக் கொண்டிந்த பத்திரிகையாளர்கள் சிலர், ஏதோ இவரே ஐஸ்வர்யாராய் மாதிரி நடந்துக்கிறாரே என்று கமெண்ட் அடிக்க தவறவில்லை.

இது நடந்தது இரண்டு நாட்கள் கூட ஆகவில்லை. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மாலை நான்கரை மணிக்கு என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் ஐந்தரைக்கு மணிக்கு மேல். இந்த சந்திப்பு முடிந்து எல்லாரும் வெளியேறும் போதுதான் உள்ளேயே நுழைந்தார் அஞ்சலி. அதுவும் கடுகடு முகத்துடன்.

எங்கேயோ பிரச்சனை இருக்கு...

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter