|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க...
-யுவன்சங்கர்ராஜா தாராளம்

திங்க் மியூசிக்!

மிக குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்கும் முன்னணி ஆடியோ நிறுவனம் இது. தமிழ்சினிமாவின் முக்கியமான படத்தின் பாடல்கள் கடந்த இரண்டு வருடங்களாக இவர்கள் கையில்தான்! பையா இந்த நிறுவனத்தின் ஐம்பவதாது படம். இந்த சந்தோஷத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக யூத் ஏரியாவின் டாப் மியூசிக் டைரக்டர்களை அழைத்திருந்தார்கள். யுவன்சங்கர்ராஜா, கார்த்திக்ராஜா, ஜேம்ஸ் வசந்தன், தமண், தரண் ஆகியோர் வந்திருந்தார்கள்.

என்னுடைய சுப்ரமணியபுரம் படத்தை திங்க் மியூசிக்தான் வாங்கியிருந்திச்சு. எப்பவும் முதல் காதல், முதல் முத்தத்திற்கு மனசில ஒரு முக்கியமான இடம் இருக்கும். அதுபோல என்னோட முதல் படமான சுப்ரமணியபுரம் ஆடியோவை இந்த நிறுவனம் வாங்கியிருந்ததால் இந்த கம்பெனி மேல் எனக்கு தனி அன்பு உண்டு என்றார் ஜேம்ஸ் வசந்தன்.

யுவன் பேச்சு அற்புதம். சற்றே பொதுநலன் சார்ந்த பேச்சு அது. எங்களை மாதிரி இசையமைப்பாளர்களின் ஆடியோவை வெளியிடுறீங்க. சந்தோஷம். அதே நேரத்தில் வளர துடிக்கிற அறிமுக இசையமைப்பாளர்களுக்கும் நீங்க வாய்ப்பு கொடுக்கணும். இதுபோன்ற யங் டேலன்ட்டுகளுக்கு தயாரிப்பாளர் சிக்கி, அவங்க படம் எடுத்து, அது வெளியே வந்து ஹிட் ஆனால்தான் வாழ்க்கை. ஆனால் நீங்க நினைச்சா இந்த மாதிரி இசையமைப்பாளர்களை வச்சு ஆல்பங்கள் தயாரிச்சு ரிலீஸ் செய்யலாம் என்றார்.

நிகழ்ச்சியில் பாடகர் ஹரிசரண், பாடகி மதுமிதா, திங்க் மியூசிக் டைரக்டர் ஸ்வரூப் ரெட்டி, சிஇஓ ப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter