|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
மணிரத்னம் படத்தில் சிம்புவா?
உலவிக்கொண்டிருக்கும் உடான்ஸ்...

மணிரத்னம் படத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படி நெட்டுகளிலும், வார இதழ்களிலும் செய்தி றெக்கை கட்டி பறந்தது கடந்த சில வாரங்களாக! (நமது இணைய தளத்தில் அல்ல) ஆனால் உண்மையில் நடந்தது என்ன? ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!

ராவணா படத்தில் நடிக்கும் அபிஷேக் பச்சனுக்கு குரல் கொடுக்க சரியான ஆளை தேடிக் கொண்டிருந்தார் மணிரத்னம். சட்டென்று சிம்பு நினைவுக்கு வர, நேரில் வாங்க. பேசணும் என்றாராம். அதன்பின் இருவரின் சந்திப்பு நடந்தது. அதற்குள் இருவரும் சேர்ந்து படம் பண்ண போகிறார்கள் என்ற தகவல் காட்டு தீயாக பரவி விட்டது.

குரல் தேர்வுக்கு பின் சிம்புவின் குரலே அபிஷேக்குக்கு பொருத்தமானது என்ற முடிவுக்கு வந்த மணிரத்னம். அவரையே பேச வைத்து விட்டாராம். வேடிக்கை என்னவென்றால் இந்த டிராக்கை முதலில் பேசியிருந்தவரும் ஒரு பிரபல நடிகர்தான். அவரது குரலை விட சிம்புவின் குரல் இன்னும் பொருத்தமாக இருக்கிறதாம். இதற்கிடையில் சிம்புவும், கவுதம் மேனனும் உடனடியாக இணைந்து இன்னொரு படத்தை தருகிற மூடில் இருக்கிறார்கள். பேச்சு வார்த்தை துவங்கியிருக்கிறது. முடிவு காயா? பழமா? என்பது இன்னும் இரண்டொரு நாட்களில் தெரியும்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter