|
தொள தொள சட்டையா இருந்தாலும் பரவாயில்ல, மளமளன்னு எடுத்து மாட்டிக்கோங்கிற பாலிசிக்கு வந்திட்டாரு சனாகான். முதல் படமான சிலம்பாட்டத்தில சிம்பு கூட ஜோடி சேர்ந்தார். அப்பவே அடுத்த நயன்தாரா, அடுத்த அசின், அடுத்த த்ரிஷான்னு ஒரே பில்டப் கொடுத்தது அவரோட வட்டாரம். ஆனால் படம் வந்த சில நாட்களில் எங்கே அவர்னு தேட வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டது விதி.
சிம்புவின் புகழ் பாடிக் கொண்டேயிருந்த சனாகானை அந்த சிம்புவே தன் அடுத்த படத்தில் சேர்க்கவில்லை. நல்லவேளையாக நான் இருக்கேன் என்று கை கொடுத்தார் பரத். தம்பிக்கு இந்த ஊரு படத்தில் ஒரு பொம்மை போல வந்து போனாலும், ரிலீசுக்கு பிறகு யாருமே சனாகான் இருக்கிற பக்கம் கூட எட்டிப்பார்க்கவில்லை.
விஜய், அஜீத், விக்ரம்னு கனவு கண்டு கொண்டிருந்த சனாவுக்கு அதெல்லாம் டூ மச் என்று தெரியவே பல மாதங்கள் பிடித்தது. இப்போது சிம்பு, பரத்தே டூ மச் என்றாகிவிட்டது அவரது நிலைமை. வேறு வழியில்லாமல் எந்த ஹீரோ வந்தாலும் எஸ் சொல்லிவிடுவது என்ற எண்ணத்தில் இருந்தார். அதற்கேற்ற மாதிரி சிபிராஜுடன் ஜோடி சேர அழைப்பு வந்திருக்கிறது. சடங்கு சம்பிரதாயம் என்றெல்லாம் இழுத்தடிக்காமல் அட்வான்சை வாங்கிக் கொண்டாராம்.
சினிமா புரிஞ்சு போச்... |