|
கவுண்டமணி கேள்விப்பட்டிருந்தால் "அட மாங்கொட்டை தலையனுங்களா" என்று தனது வழக்கமான ஸ்டைலில் ஒரு குட்டு வைத்திருப்பார். ஆனால் விஷயத்தை அவர் காதுக்கு கொண்டு செல்லவில்லை உறவினர்கள். இன்று காலை வந்த வதந்தியின் சூடு அப்படி...
மாரடைப்பால் அவர் மரணமடைந்து விட்டதாக காட்டுத் தீ போல நியூஸ் பரவியது. பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் குழப்பம். மருத்துவமனைக்கும் அவரது வீட்டுக்கும் போன் செய்து மாய்ந்து போனார்கள். ஒரு இடத்திலிருந்தும் உருப்படியான தகவல் இல்லை. கடைசியில் அந்த செய்தி டுபாக்கூர் என்று தெரிய வர, அப்பாடி.... என்றது ஒட்டுமொத்த கோடம்பாக்கமும்.
சரி என்னதான் நடக்கிறது கவுண்டர் விஷயத்தில்?
ஏகப்பட்ட டெஸ்ட்டுகளுக்கு பின் அவசரமாக அவருக்கு பைபாஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்களாம் மருத்துவர்கள். அந்த பைபாஸ் ஆபரேஷன்தான் இன்று காலை நடைபெறுகிறது. இந்த விஷயம் மெல்ல வெளியே கசிந்து கசிந்து காலாமானார் என்கிற அளவுக்கு உல்டாவாகிவிட்டது.
கவுண்டர் நிச்சயம் வருவார். அவரால் உதை வாங்கப்பட வேண்டிய நடிகர்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் நம்பிக்கையோடு!
|