|
வண்ணமயமாகிவிட்டது சசிகுமாரின் வாழ்க்கை. தயாரிப்பாளர், ஹீரோ, இயக்குனர், விநியோகஸ்தர் என்று எந்தப்பக்கம் திரும்பினாலும் ஹிட்!
இப்போது கூடுதலாக ஒரு விளம்பர படத்திலும் நடிக்க அழைப்பு வந்திருக்கிறதாம். மும்பையில் பிரபலமாக விளங்கும் ஒரு பெயிண்ட் கம்பெனி ஒன்று தனக்காக விளம்பரம் ஒன்றை எடுக்க நினைத்தது. இதற்காக தமிழகத்திலிந்து முக்கிய நடிகர் யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து ஆல்பத்தை புரட்டியதில் முதலில் பளிச்சிட்டவர் நம்ம சசிதானாம்.
தமிழ்நாட்டில் அவருக்கு இருக்கும் வரவேற்பை இன்டர்நெட்டின் மூலம் அறிந்து கொண்ட அந்த கம்பெனியினர் பெருத்த சம்பளத்தை தருவதாக கூறி அழைத்தார்களாம். அதற்கு சசி என்ன பதில் சொல்லியிருப்பார்?
அதுதான் சப்... நான் இப்போ ஷ§ட்டிங்ல பிசியா இருக்கேன். என்னால மும்பைக்கெல்லாம் வர இயலாது. வேணும்னா சென்னையில ஷ§ட்டிங் வைங்க. ரெண்டு நாள் நடிச்சு தர்றேன் என்றாராம். சசிக்காக சென்னைக்கே வர ரெடியாகிக் கொண்டிருக்கிறது விளம்பர டீம்.
ம்...ம்... கலக்குற சந்துரு!
|