|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
சிவப்பு ரோஜாக்கள் ரீமேக்
ஹீரோயின் ஸ்ருதி கமல்?

எப்போதுமே கூட்டாஞ்சோறுக்கு ருசி அதிகம். இந்த உண்மை கொஞ்சம் லேட்டாக புரிந்திருக்கிறது! தான் இயக்கப் போகும் சிவப்பு ரோஜாக்கள் ரீமேக் படத்திற்கு சேரன் மற்றும் அமீர் உதவியை நாடியிருக்கிறாராம் மனோஜ். இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இந்த வாரிசுக்கு தமிழ் சினிமா கொடுத்திருக்கிற இடம் ரொம்பவே சின்னது. அப்பாவின் சாதனைகளில் அரை அங்குலத்தை கூட எட்டாத இவருக்கு இப்போதுதான் யோகம் கதவை திறந்திருக்கிறது.

தன் அப்பா இயக்கிய சிவப்பு ரோஜாக்கள் படத்தையே ரீமேக் செய்யலாம் என்று நினைத்த மனோஜ் இதில் நடிக்க முன்னணி ஹீரோக்களுக்கு வலை வீசினார். சிம்பு, ஜீவா, ஜீவன் என்று யார் யாரையோ அணுகி, கடைசியில் அபியும் நானும் படத்தில் அறிமுகம் ஆன கணேஷ் வெங்கட்ராம் என்பவரை நடிக்க வைக்கலாம் என்று நினைத்திருந்தார். அதுவும் முடியாமல் தற்போது பி.வாசுவின் மகன் ஷக்தியை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். மனோஜுக்காக இல்லையென்றாலும், இயக்குனர் இமயத்திற்காக தங்கள் பங்களிப்பையும் செலுத்த முன் வந்திருக்கிறார்கள் சேரனும் அமீரும். ஒருவர் வசனம் எழுத, மற்றவர் திரைக்கதை அமைக்கிறாராம்.

ஷக்திக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்று தெரிந்தால் வாயை பிளப்பீர்கள். அவர்... ஸ்ருதி கமல்! ஷக்திக்கு ஜோடியாக நடிப்பதா என்று முதலில் தயங்கியவரை பாரதிராஜாவே பேசி சம்மதிக்க வைத்ததாக தகவல்.

சிவப்பு கம்பளத்தை விரிச்சுட்டாங்களே...

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter