|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
நமீதா வீட்டுமுன் கலாட்டா?
அடித்து பிடித்து வாங்கிய 55 நாள்!

நமீதாவால் நஷ்டம்! அழகான பொண்ணுதான் பட இயக்குனர் திரு என்பவர் இப்படி கூறிக் கொண்டிருக்க உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய முற்பட்டோம். அதற்கு முன் இந்த படத்தின் கதை என்ன என்பதை பார்ப்போம்.

ஸ்கூலில் படிக்கும் பையன் ஒருவன் தன்னை விட மூத்தவள் மீது காதல் கொள்வதும், அந்த காதலை அவள் ஏற்றுக் கொண்டாளா என்பதும்தான் இப்படத்தின் கதை. இதில் நடிக்க எப்படி சம்மதித்தார் நமீதா? இது குறித்துதான் கதை கதையாக சொல்ல ஆரம்பிக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

முதலில் இந்த படத்தின் டைரக்டராக ஒப்பந்தம் ஆனவர் காமராஜ் என்பவர். பெரிசு என்ற படத்தை மிக குறுகிய காலத்தில் எடுத்து வெற்றிப்படமாக ஆக்கியவர் என்பதால் இவர் பெயரை சொன்னதுமே கால்ஷீட் கொடுக்க சம்மதித்து அட்வான்சும் வாங்கிக் கொண்டார் நமீதா. ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே அதிர்ச்சி. அட்வான்ஸ் கை மாறியதும் படத்தின் இயக்குனரையும் மாற்றிவிட்டார்களாம். திரு என்பவர்தான் இயக்கப் போகிறார் என்று சொல்ல, அப்போதே கால்ஷீட் இல்லை என்று முரண்டு பிடிக்க ஆரம்பித்துவிட்டாராம் நமீதா. பிரச்சனை நாளுக்கு நாள் பெரிதாகியது. ஒருநாள் நமீதாவின் வீட்டுக்கே போய் தகராறு செய்தார்களாம்.. இதையடுத்து தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும், இணைந்து இந்த பிரச்சனையை அலசியது. நமீதா வீட்டிற்கு போய் தகராறு செய்தவர்கள் இரு சங்கங்களின் முன்னிலையில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்களாம். அதன்பின் சுமார் 55 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார் நமீதா.

இவரிடம் கால்ஷீட் வாங்கும் போது முன்னணி ஹீரோக்களில் ஒருவரை உங்களுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்வோம் என்று சொன்னவர்கள், பின்பு டைரக்டர் திருவின் அக்கா மகனையே ஹீரோவாக்கிவிட்டார்கள். இந்த எரிச்சலில் படம் தொடர்பான பிரமோஷன்களுக்கு தலையை காட்ட மறுத்துவிட்டாராம் நமீதா.

இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் இப்போது அவது£று பரப்புவதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். எது நிஜம், எது பொய் என்பது நமீதா வாயை திறந்தாலன்றி தெரியப் போவதில்லை!

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter